Skip to main content

Posts

Showing posts with the label Kamba Ramayanam

ஆழ்வார்கள் பாடிய கோசலையின் குமரன்

டாக்டர் சுதா சேஷய்யனைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன் (படிக்க) . இவர் ஒரு MBBS, MS. மருத்துவ யுனிவர்சிட்டியில் ஒரு புரொஃபஸர். இவரது ராமாயண சொற்பொழிவுகளை நீங்கள் கேட்கவேண்டும். கம்பனை “கரைத்துக் குடித்தவர்” - கொட்டும் நீர்வீழ்ச்சி, தெளிந்த நீரோடை எனத் தமிழில் இவர் பேசத் தொடங்கினால், மெய்மறந்து, ஊண் மறந்து, உறக்கம் மறந்து நாள் முழுதும் ராமச்சந்திர மூர்த்தியை “நேரில்” தரிஸித்து, அனுபவிக்கலாம். அவ்வளவு இனிமை, சுவை. சுதா சேஷய்யன் நேற்று (4-4-2010) துவங்கி 9 நாட்களுக்கு ஸ்ரீ வரஸித்தி விநாயகர் கோயிலில், “ஆழ்வார்கள் பாடிய கோசலையின் குமரன்” என்ற தலைப்பில் ராமாயணத்தின் இன்னொரு கோணத்தைப் பற்றி பேசுவார். விஜயாவும் நானும் நேற்று மாலை 6-30க்கு சென்றோம். ரசித்துக் கேட்டோம். ராஜப்பா 10:30 மணி 5-4-2010

Kamba Ramayanam

எல்லாரும் சுதா சேஷய்யன் பற்றிய blogpost படித்திருப்பீர்கள். இதோ கம்பரின் எழுத்தோவியம் உங்கள் முன்னால் கைகேயி சுமந்திரனை கூப்பிட்டு, ஸ்ரீராமனை அழைத்து வருமாறு சொன்னாள். எதற்கென்று காரணம் தெரியாத சுமந்திரன், மகிழ்ச்சியோடு போய் ஸ்ரீராமனை அழைக்கிறான். 'கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப் பெற்றவன் தன்னைப் போலப் பெரும்பரிவு இயற்றி நின்றார்; சிற்றவை தானும், "ஆங்கே கொணர்க!" எனச் செப்பினாள் அப்பொன் தட மகுடம் சூடப் போகுதி விரைவின்' என்றான். 85 (சிற்றவை - சித்தி) ஏழ்-இரண்டு வருஷங்களுக்கு வனவாஸம் போகுமாறு ஸ்ரீராமனிடம் கைகேயி சொல்கிறாள்: ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த் தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு, பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி, ஏழ்-இரண்டு ஆண்டின் வா" என்று, இயம்பினன் அரசன்' என்றாள். 111   இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்டஅப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா! 112 ...

Dr சுதா சேஷய்யன் - கம்ப ராமாயணம்

Dr Sudha Seshayyan and Kamba Ramayanam “ சுதா சேஷய்யன் இன்று மாலை மயிலாப்பூர் PS High School-ல் ஸ்ரீராம அவதாரம் என்கிற தலைப்பில் உரையாற்றுவார்” என்ற செய்தியை நேற்று காலை (18-04-2009) மயிலாப்பூர் டைம்ஸில் பார்த்தவுடன், இந்த நிகழ்ச்சிக்குத் தவறாமல் போகவேண்டும் என விஜயாவும், நானும் தீர்மானித்துக் கொண்டோம். சுதா சேஷய்யன் அவர்கள் ஒரு தலைசிறந்த சொற்பொழிவாளர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கம்ப ராமாயணத்தை “ கரைத்துக் குடித்து ” அதில் “ முழுகி எழுந்தவர் " . அவரது கம்ப ராமாயண சொற்பொழிவுகள் மிக பிரசித்தம். தமிழில் நல்ல புலமை. (ஆங்கிலத்திலும்). அவரது சொல்லாற்றலும், தடையில்லா சொல் பெருக்கும் கேட்க கேட்க ஆனந்தமாயிருக்கும். மாலை 5-45க்கு ஹாலை சென்றடைந்தோம்; எனக்கு வியப்பும், நிறைய ஏமாற்றமும். 80-85 நபர்கள் மட்டுமே அமரக்கூடிய ஒரு குட்டி ஹால்! இந்தச் சிறிய ஹாலிலா சுதா பேசப்போகிறார்?! “இருக்காது, தவறான இடத்திற்கு நாம் வந்துள்ளோம்” என நினைத்த போது, “இல்லை, சுதா சேஷய்யன் இங்குதான் பேச இருக்கிறார்” என்பது உறுதியாகியது. வழக்கம்போல, அவர் மிக நன்றாக சொற்பொழிவாற்றினார். ஸ்ரீராம அவதாரத்தி...