Skip to main content

Posts

Showing posts with the label Athikaranandhi

அதிகார நந்தி

Namma Madras,  MYLAPORE. அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு , சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் அதிகார நந்தி வாகனம் , கடந்த 1917 ம் ஆண்டுக்கு முன் , மர வாகனமாகவே இருந்தது. மயிலை கோவில் அருகில் உள்ள பொன்னம்பல வாத்தியார் தெருவில் அப்போது குடியிருந்த வீரசைவ மரபைச் சேர்ந்தவரும் , தண்டரை வைத்தியர் குடும்ப உறுப்பினருமான   த.செ.குமாரசுவாமி பக்தர் என்பவர் , இந்த மர வாகனத்திற்கு வெள்ளிக் கவசம் போர்த்தும் பணியை நிறைவேற்றினார். பங்குனிப் பெருவிழாவில் மூன்றாவது நாள் அதிகாலையில் 6 மணிக்கு அதிகார நந்தியில் கபாலீசுவரர் எழுந்தருளும்போது , முதல் மரியாதை குமாரசுவாமி பக்தரின் குடும்பத்தினருக்கே அளிக்கப்படுகிறது. சென்னையில் பிற சிவாலயங்களில் உள்ள அதிகார நந்தி வாகனங்களை விட , மயிலையில் உள்ளது கண்ணைக் கவரும் வகையில் கலை நயம் மிக்கதாக விளங்குகிறது. அதன் ஒவ்வொரு பகுதியும் , ...

ஸ்ரீ கபாலீஸ்வரர் அதிகார நந்தி

ஸ்ரீ கபாலீஸ்வரர் அதிகார நந்தி இன்று (20 மார்ச்) காலை பாங்கிற்கு (Bank) கிளம்பினோம். நடுவழியில்தான் தெரிந்தது, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று அதிகார நந்தி என்பதும், போக்குவரத்து பல இடங்களில் திருப்பி விடப்படுகிறது என்பதும். பஸ்ஸை மந்தவெளி போஸ்ட் ஆஃபீஸ் அருகில் நிறுத்தி விட்டார்கள். நடக்க ஆரம்பித்தோம். தெற்கு மாட வீதி முனையில் (குமரன் கடை அருகில்) பெரிய பந்தல் போட்டு, ஸ்வாமி-அம்மனை அங்கு எழுந்தருளப் பண்ணியிருந்தார்கள். என்ன அழகான அலங்காரம் ! காண கண் கோடி வேண்டும். இன்று என்ன தவம் பண்ணினோமோ, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வழிபட்டோம். புண்ணியம். நாலு வருஷங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பகம் அவென்யூவில் இருந்த போது, இதே பங்குனியில் விடியற்காலம் கோயில் சென்று ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரனை அதிகார நந்தியில் வணங்கி வழிபட்டோம். இன்றும், கூட்டமான கூட்டம்; திருஞான சம்பந்தருக்கு திருமுலைப் பால் வழங்கிய உத்ஸவமும் இன்று இருந்தபடியால், பல இடங்களில் பக்தர்களுக்கு சூடான பால் கொடுத்தார்கள். நிறைய பெண்மணிகள் கைகளில் தட்டு தட்டாக பக்ஷணங்கள், பழங்கள், புஷ்பம் போன்ற பல சீர்வரிசைகளை ஏந்தி, ம...