Skip to main content

Posts

Showing posts with the label Sunrise

ஸூர்ய தர்சனம் 06-02-2011

ஸூர்ய தர்சனத்தைப் பற்றி மஹாகவி ஏதேனும் எழுதியுள்ளாரா என சற்றுமுன் தேடினேன்; எழுதாமல் இருப்பாரா? இதோ அவரது  எழுத்தில்: “பரிதியே பொருள் யாவிற்கு முதலே, - பானுவே, பொன்செய் பேரொளித் திரளே, ” “கடலின் மீது கதிர்களை வீசிக் கடுகி வான்மிசை ஏறுதியையா படரும் வானொளி யின்பத்தைக் கண்டு பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள் ..” இன்று (06-02-2011, ஞாயிறு) காலை 6-40க்கு வங்கக் கடலிலிருந்து எழும்பிய ஸூரியனின் பொன்னிற தகத் தகவென்று ஒளிவீசும் அந்த அற்புதக் காட்சியை கண்டு மனம் பறி கொடுத்தேன். தினம் தினம் பார்த்தாலும் சலிக்காத, மனசுக்கு நிம்மதி தரும் இயற்கையின் பேரழகு அது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா! ஏதோ நான் மட்டும்தான் ஸுரிய தர்சனத்தை கண்டு மகிழ்கிறேன் என்று எண்ணியிருந்தேன் - இன்று காலை சுமார் 10 பேரை பார்த்தேன் - எல்லாரும் ஸூரியனின் பொன்செய் பேரொளித் திரளில் மனம் மயங்கி ஸூரியனையே பார்த்துக் கொண்டு இருந்தனர். இன்னும் 10 பேர் ஸூரியனைக் குறித்து ஸ்லோகங்கள் (ஆதித்ய ஹ்ருதயம்?) சொல்லிக் கொண்டிருந்தனர். நேற்று காலை முன்பின் தெரியாத ஒருவர் காரிலிருந்து இறங்கி ஓடிவந்து எங்கள் பக்கத்தில் நின்று “ஓ, ...

சூரிய உதயம்

சூரியோதயம். பெஸண்ட்நகர் வந்ததிலிருந்தே ஒரு வருஷத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட தினம்தோறும் காலையில் தவறாமல் பீச்சில் walk போவது எனது வழக்கமானது. பாகவதம் கேட்டுவிட்டு 6-45க்குப் பிறகுதான் கடலோரம் செல்வேன். எனவே சூரியோதயத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறவில்லை. இந்த மாசமாவது சூரிய உதயத்தை பார்த்து விட உறுதி கொண்டேன். சனிக்கிழமை, ஜனவரி 22ஆம் தேதி காலை 6-15க்கே விஜயாவும் நானும் வீட்டை விட்டு கிளம்பினோம். 6-36க்குத்தான் உதயம் என பேப்பரில் படித்ததால், 6-30 வரை பீச்சில் நடந்தோம். இந்த வருஷம் சென்னையில் “குளிர்” கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால். காலை 6-15 மணிக்கு குளுகுளுவென்று நன்றாக இருந்தது. 6-30க்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து உதயத்திற்காக காத்திருந்தோம். 6-34க்கு அடிவானத்தில் சிகப்பு வண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அன்று மேகங்கள் இருந்ததால், சூரியனின் முதற் கிரணங்கள் 6-40க்குத்தான் புலப்பட்டன. 6-45க்கு தக தகவென சிகப்பு நிற சூரியன் கடலிலிருந்து கிளம்பியது - பரவசமான ஒரு காக்ஷி. வானமே ஒளிமயமானது. என்னுடைய ஃபோன் காமி்ராவிலிருந்து .. 6-50 வரை சூரிய உதயத்தை ரசித்துவிட்டு, உள்ளத்திலே மக...