Skip to main content

Posts

Showing posts with the label Gadwal

The ONE and ONLY SUJATHA

கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா சுஜாதாவின் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதே, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நல்நோக்கில் இதோ .... கடவுள்களின் பள்ளத்தாக்கு . "திவ்ய தேச க்ஷேத்ர தீர்த்த யாத்திரை செய்யக் குதூகலமுள்ள பக்தர்களுக்கு, அவை சம்பந்தமான சகல விவரங்களையும் தெரிவிப்பதற்கான பத்ரி யாத்திரை விளக்கு" - மேற்கண்ட தலைப்பின் கீழ் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் 40 வருஷங்களுக்கு முன் ஒரு சுவாரஸ்யமான புத்தகம் எழுதியிருக்கிறார். அவர் போனபோது யாத்திரையில் உள்ள கஷ்ட-சுகங்களையும், தபால் ஆபீஸ் விவரங்கள் உட்பட்ட காட்சிகளையும் சம்ஸ்கிருதமும் தமிழும் மயங்கிக் கலந்த ஒரு வசீகர வசன நடையில் விவரித்திருக்கிறார். 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில்... "முதுகு பற்றிக் கைத் தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி, விதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டிருமி, இது வென் அப்பர் முத்தவா றென்று இளையவர் ஏசா முன், மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே'" என்று முதுகில் ஒரு கை வைத்துக் குச்சி ஊன்றி இருமிக்கொண்டு, மேல் மூச்சு வாங்கிக்கொண்டு -...