Skip to main content

Posts

Showing posts with the label 63வர்

ஸ்ரீகபாலீஸ்வரர் திருத்தேர் - மயிலாப்பூர். 2012

மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீச்வரர் திருக்கோயிலில் இந்த வருஷம் பங்குனி உற்சவம் மார்ச் 27_ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. மார்ச் 30 காலை அதிகார நந்தியில் ஸ்வாமி புறப்பாடு. ஏப்ரல் 1_ஆம் தேதி ரிஷப வாஹனம். ஏப்ரல் 3-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 7-30க்கு திருத்தேர். விஜயாவும் நானும் சீக்கிரமே எழுந்து, குளித்து, 7 மணிக்கு மயிலாப்பூர் கிளம்பினோம்.  மந்தைவெளி பஸ் நிறுத்தத்தில் இறங்கி, நடக்க ஆரம்பித்தோம். உமாவும் வந்தாள். ஆதம் தெரு வழியாகச் சென்று தேரை தரிஸித்தோம். விநாயகர், ஸ்வாமி, அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களையும், ஸ்வாமிகளையும் நன்கு தரிஸித்தோம். ஸ்வாமி தேருக்கு மட்டும் கூட்டம் இருந்தது. விநாயகர் தேர் ஸ்வாமி தேர் ஸ்வாமி தேர் அம்பாள் தேர் முருகன் தேர் தேர்களை தரிஸித்த பின்னர், கோயிலுக்குச் சென்றோம். அம்பாள், ஸ்வாமியை கண்குளிர தரிஸித்தோம். திரும்பும் வழியில், மாமி மெஸ்ஸில் இட்லி சாப்பிட்டோம். நீண்ட நேரம் பஸ்ஸுக்காக மந்தைவெளியில் காக்க வேண்டியிருந்தது. 11 மணி சுமாருக்கு வீடு திரும்பினோம். ஏப்ரல் 4-ஆம் தேதி (புதன்) 63...

மயிலாப்பூர் கோயில் தேர் மற்றும் 63வர் உத்ஸவம்

Mylapore temple Ther and 63var Uthsavam 06-04-2009 திங்கட்கிழமை அன்று காலை மயிலாப்பூர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விஜயாவும் நானும் 10-15க்கு சென்றபோது, தேர் வடக்குமாட வீதியில் இருப்பதாக அறிந்தோம். வடக்கு மாட வீதிக்குச் சென்று தேரில் உலா வந்த ஸ்வாமி, அம்மன், முருகன் ஆகியோரை தரிசித்தோம். கூட்டம் அதிகமாக இருந்தது. நிறைய இடங்களில் சக்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, மோர் ஆகியவற்றை கொடுத்துக் கொண்டே இருந்தனர். வெயில் கொளுத்தியதால், தெருவில் தண்ணீரை ஊற்றிக்கொண்டே போனார்கள்; இந்த வருஷம் ஒரு தண்ணீர் லாரியை ஏற்பாடு செய்து அதிலிருந்து நீர் கொட்டுமாறு செய்திருந்தார்கள் - நல்ல யோசனை. 07-04-2009 செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு 63 நாயன்மார்கள் ஊர்வலம். இதை பார்ப்பதற்கு லலிதாவும், குமாரும் ஆவடியிலிருந்து காலை 11-45க்கு வந்தனர். சாப்பிட்ட பிறகு 3-15க்கு அவர்கள் 2 பேர், நாங்கள் 2 பேர், சதீஷ் ஆகிய 5 பேரும் கோயிலுக்குப் புறப்பட்டோம். கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே ராமகிருஷ்ண மடம் தெரு, தெற்கு மாட வீதி வழியாக கோயில் கோபுரம் போனோம். கீழ வீதிக்குச் சென்று ஸ்வாமி, அம்மன், முருகன் ...

மயிலையே கயிலை, கயிலையே மயிலை

மயிலாப்பூரைப் பற்றிய அறிமுகம் - யாவரும் அறிந்த ஒன்றே. மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாசத்தில் உத்ஸவம் நடைபெறும். இந்த வருஷம், நேற்று (31-03-2009) காலை கொடி ஏற்றப்பட்டது. நாளை (02-04-2009) விடியற்காலை 5-30 மணியளவில் வெள்ளி அதிகார நந்தி யில் ஸ்வாமி புறப்பாடு . 6 ஆம் தேதி திங்களன்று காலை திருத் தேர் . 7 ஆம் தேதி செவ்வாய் பகல் 2-55 க்கு 63-வர் உத்ஸவம் . 9 ஆம் தேதி வியாழனன்று இரவு திருக்கல்யாணம் . பங்குனி உத்ஸவத்திற்காக கோயில் மட்டுமல்ல, கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளும், மற்ற தெருக்களும் அலங்கரிக்கப் பட்டு, அந்த சுற்றுப்புற சூழ்நிலையே பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது. எல்லாரும் வாருங்கள்; தேரையும், 63-வர் உலாவையும் தரிசித்து, ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீகபாலீஸ்வரரின் அருளை பூரணமாக பெறுங்கள். ராஜப்பா 01-04-2009 இரவு 8-15 மணி பதிவிற்கு பின்னூட்டம். இன்று (02 ஏப்ரல்) காலை 6 மணிக்கு நானும் விஜயாவும் கோயிலுக்குச் சென்றோம். வெள்ளி அதிகார நந்தி வாஹனத்தில் ஸ்ரீ கபாலீஸ்வரரை நன்கு கண்குளிர தரிசித்தோம். கோயில் முழுக்க கூட்டம். பல இடங்களில் கூட்டம் கூட்டமாக பலர...

அன்னதானம் Annadhaanam

அன்னதானம். ANNADHAANAM பல ஊர்களிலே, பல கோயில்களிலே, பல இடங்களிலே அன்னதானம் தினம் தினம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிவோம். இந்தப் பதிவு அதைக் குறித்து அல்ல. மயிலாப்பூர் ஸ்ரீசாய்பாபா கோயிலில் என்றைக்குப் போனாலும் எப்போது போனாலும் இரவானாலும், பகலானாலும் உங்களுக்கு தொன்னை நிறைய சுடச் சுட வெண்பொங்கலோ, சக்கரைப் பொங்கலோ, புளியோதரையோ, தயிர் சாதமோ கிடைப்பது நிச்சயம். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் (Mar-Apr) மயிலாப்பூர் கோயிலில் உத்சவம் நடைபெறும் - அறுபத்துமூவர் விழாவன்று RK Mutt ரோட்டில் ஸ்வாமி ஹால் தொடங்கி, இரண்டு கிமீ தூரத்திற்கு பத்தடிக்கொன்றாக சிறுசிறு "அன்னதான ஸ்டால்கள்" போட்டு, எல்லாருக்கும் வாரி வாரி வழங்குவார்கள். வழங்குபவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மக்கள்தான். ஸ்ரீராமகிருஷ்ண மடம் முன்பாகவும், மந்தைவெளி பஸ் டிப்போ அருகிலும் இலை நிறைய இரண்டு விதமான சாப்பாடு வழங்குவார்கள். இதற்கு 2-3 நாட்கள் முன்பாக நடக்கும் திருத்தேர் விழாவின்போது, வீடு தோறும் தங்களால் முடிந்த அளவு சாப்பாடு கொடுப்பார்கள். இதுபோன்று, சென்னையில் நூற்றுக்கணக்கான கோயில்களை ஒட்டி வாழும் சாதாரண மக்கள் அளிக்...