Skip to main content

Posts

Showing posts with the label Kothanda Ramar Koil

ஸ்ரீகோதண்டராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மாம்பலம்

ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் தான் புதிதாக சொல்லத் தொடங்கியுள்ள ஸ்ரீராமாயண உபந்யாஸத்தில் நேற்று (6-4-2012) காலை கோதண்டராமர் கோயிலையும், அந்த கோயிலில் உள்ள ஸஞ்சீவ பர்வத ஹனுமானையும் பற்றி விவரித்தார். உடனே சென்று ஸ்ரீராமரையும், ஹனுமானையும் தரிஸிக்க ஆசை வந்தது. மாலை 4 மணிக்கு நானும், விஜயாவும் கிளம்பிவிட்டோம். தி.நகர் பஸ் நிலையத்திற்கு மிக அருகில், மேற்கு மாம்பலத்தில் மேட்லி ரோட் கீழ்ப்பாதை (SUBWAY) முடியும் இடத்தில் அதன் இடது பக்க தெருவில் இந்த கோயில் உள்ளது. 150 வருஷங்கள் புராதனமானது. பிரதான வாயிலில் நுழைந்தால் அங்கு ஸ்ரீ ஹனுமான் சன்னதி இருக்கிறது. இந்த ஹனுமானைப் பற்றித்தான் ஸ்ரீ வேளுக்குடி காலையில் விவரித்தார். ஹனுமானை நன்கு தரிஸித்துக் கொண்டோம். பிரதான வாயில் - கோதண்டராமர் கோயில் முக்கிய சன்னதியின் இடது புறத்தில் ரங்கநாயகி தாயார் சன்னதி உள்ளது. தாயாரை வேண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தால், ஸீதம்மா, லக்ஷ்மண், ஆஞ்சநேயர் ஸமேத ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் காக்ஷி அருளுகிறார். பத்ராசலம் கோயிலுக்கு அடுத்தபடியாக இங்குதான் பட்டாபிஷேக ராமர் இருக்கிறார். கோதண்டராம...