Skip to main content

Posts

Showing posts with the label Gruha Pravesam

Gruha Pravesam - Vasu and Srikanth

க்ருஹ ப்ரவேசம். 29-04-2017 கேளம்பாக்கம் - வண்டலூர் ரோட்டில், கண்டிகை என்னுமிடத்திற்கு அருகில், UNITEC COவின் வீடுகள் புக் பண்ணி சுமார் 7-8 ஆண்டுகளுக்கு பின்னால், 2017 ஏப்ரல் மத்தியில் வீடுகளை முடித்து, சாவியை வாசு / ஸ்ரீகாந்த் இருவரிடமும் கொடுத்தார்கள். கணபதி ஹோமம் மட்டும் செய்யலாம் என வாசு முடிவெடித்தான். ஏப் 29 சனிக்கிழமை செய்ய எண்ணினான். வாசு, ராஜி, ஜெயஸ்ரீ, ஆனந்த், ஸ்ரீநாத் ஆகியோர் 27 (ஏப்ரல் 2017) காலை 11-30 க்கு தில்லியிலிருந்து வந்தனர். நம் வீட்டில் சாப்பிட்டு விட்டு, 1 மணி சுமாருக்கு, அவர்கள் யாவரும் மடிப்பாக்கம் சென்றனர். மாலை 7 மணிக்கு வாசுவும் ஆனந்தும் யூனிடெக்கிலிருந்து திரும்பினர். 7-45க்கு ராஜி, ஜெயஸ்ரீ, ஸ்ரீநாத் தி.நகர் போய்விட்டு, புடைவை வாங்கிக் கொண்டு திரும்பினர். 28-07-2017 வெள்ளிக்கிழமை : விஜயா, ஜெயஸ்ரீ, ராஜி, வாசு ஆகியோர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றனர். பின்னர், நிறைய சாமான்கள் வாங்கி வந்தனர். சாப்பிட்ட பிறகு, எல்லாரும் யூனிடெக் சென்றனர். நேற்றும், இன்றும் அருண் கார்தான். இரவு 7-30க்கு திரும்பினர். அரவிந்த், ஸ்ருதி இருவரும் 7-15க்கு இங்கு வந்து சா...

கணபதி சுப்ரமணியம் கிருஹப் ப்ரவேஸம் - 06.05.2011

கிருத்திகாவின் பெற்றோர் (Mrs and Mr. TS கணபதி சுப்ரமணியம்) தங்களுடைய புது இல்லத்தின் கிருஹப் ப்ரவேஸத்தை நேற்று, வெள்ளிக்கிழமை, 06 மே 2011 அன்று நடத்தினார்கள். இவர்களது வீடும் அர்விந்த்-கிருத்திகாவின் புது வீடும் ஒரே கட்டிடத்தில் 2ஆம் மாடியில், முதல் மாடியில் உள்ளன. காலை 8-30க்கு கோ-பூஜையுடன் விழா துவங்கியது. பின்னர் கிருஹப் ப்ரவேஸம். அடுத்து பால் காய்ச்சி குடித்தல். பின்னர் ஹோமம்.சுமார் 11-30க்கு விழா முடிவுற்றது. மிகக் குறைந்த பேர்களையே அவர் அழைத்திருந்தார். மொத்தமே 20-ஐ தாண்டவில்லை. காயத்ரி, குழந்தைகள் துறையூர் சென்றுள்ளனர்; அருண் மட்டும் வருவதாக இருந்தான்; கடைசி நேரத்தில் அவனால் வர இயலவில்லை. அதிதி தன் புது பட்டுப் பாவாடையில் ஜொலித்தாள். அவளுக்கு மிகவும் சந்தோஷம், பெருமை. பாவாடை சலசலக்க இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருந்தாள். சாப்பாட்டிற்குப் பின்னர், வீட்டை ”ஒழித்து விட்டு” நாங்கள் 3 மணிக்கு பெஸண்ட்நகர் திரும்பினோம். விழா வைதீக காரியங்களில் நன்கு நடந்தது; ஆனால், காடரர் ஸ்ரீனிவாஸன் காலை வாரிவிட்டார்; காஃபியோ, மதியம் சாப்பாடோ சரியான சமயத்தில் வரவில்லை. அர்விந்த் போய் சாப்பாட...

Gruha Pravesam - 17 April 2011 (Arun)

சென்னை அடையாரிலிருந்து 25 கிமீ தூரத்தில் OMR எனப்படும் பழைய மஹாபலிபுரம் ரோடில் (now, Rajiv Gandhi Salai) உள்ள படூர்   என்னும் இடத்தில், அருண் ஒரு 2 BHK Flat க்கு முன்பதிவு செய்தான். இதற்கான பதிவு (Registration) 19-11-2009 அன்று திருப்போரூர் என்னும் ஊரில் (படூரிலிருந்து மஹாபலிபுரம் நோக்கி இன்னும் 10 கிமீ தூரம்) sub-registrar அலுவலகத்தில் நடந்தது ( விவரங்கள் இங்கே ) வீடு கட்டி முடித்தபின் வீட்டிற்கான சாவி ஏப்ரல் 2011-ல் அருணிடம் வழங்கப்பட்டது. ஏற்கனவே க்ருஹ ப்ரவேஸத்திற்கான முஹூர்த்தம் ஃபிப்ரவரி 16 என நிச்சயிக்கப்பட்டு இருந்தது; ஆனால், சாவி கிடைக்காததால், முஹூர்த்தம் ஏப்ரல் 17, 2011 (ஞாயிற்றுக்கிழமை) என மீண்டும் நிச்சயிக்கப்பட்டது. கிருஹப் ப்ரவேஸத்திற்கான வேலைகள் முழுமூச்சுடன் ஆரம்பிக்கப் பட்டன்; எல்லாரையும் ஃபோன் மூலமே அருண் - காயத்ரி அழைத்தனர். அருகிலுள்ள ஓரிருவரை மட்டும் நேரில் சென்று அழைத்தனர். சாஸ்திரிகள், உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய உடைகள் வாங்கப்பட்டன. எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன, முஹூர்த்தமும் வந்தது. ஏப்ரல் 16 (சனிக்கிழமை) புது வீட்டிற்கு காயத்ரி சென்று வீட...

Gruha Pravesam - 06 March 2011 (Arvind)

அர்விந்த் - கிருத்திகாவின் புது வீட்டிற்கான கிருஹப் ப்ரவேஸம் நேற்று, 6 மார்ச் 2011 (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக நடந்தேறியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதற்கான முஹூர்த்தம் குறிக்கப்பட்ட பிறகு அர்விந்தும் கிருத்திகாவும் சுறுசுறுப்பாக பணிகளை ஆரம்பித்தனர். பத்திரிகை அச்சடிப்பது முதல், சாஸ்திரிகள் ஏற்பாடு, உணவு ஏற்பாடு, புத்தாடைகள் வாங்குவது, விருந்தினர்கள் அழைப்பு போன்ற வழக்கமான வேலைகளை முடித்து 6-ஆம் தேதிக்கு தயாராகினர். 4-ஆம் தேதி வெள்ளி காலை அஷோக்கும், நீரஜாவும் பங்களூரிலிருந்து வந்தனர். 5-ஆம் தேதி ஸ்ரீகாந்த் தில்லியிலிருந்து வந்தான். சதீஷும், ஸ்ருதியும் வந்தனர். 4-ஆம் தேதி இரவு முதலே வெளியிலிருந்துதான் சாப்பாடு. 5-ஆம் தேதி மாலை நீரஜாவும், கிருத்திகாவும் புது வீட்டிற்கு போய் கோலம் போட்டனர். அர்விந்த், கிருத்திகா, மற்றும் விஜயா விழாவிற்கு தேவைப்படும் எல்லா சாமான்களையும் எடுத்து வைத்தனர். 6-ஆம் தேதி - முஹூர்த்த நாள். காலை 4 மணிக்கே எழுந்து குளித்து, 5-30 மணிக்கு புது வீட்டிற்குப் புறப்பட்டோம். அருண் காயத்ரி, குழந்தைகள் 6-15க்கு அங்கு வந்தனர். கிருத்திகாவின் பெற்றோரும் 6-15...