Skip to main content

Posts

Showing posts with the label beach

ஒரு இனிய மாலைப்பொழுது

கடற்கரை இன்று 16-ஜூலை-2014 மாலை நானும் விஜயாவும் வெளியில் சென்றோம். மினி பஸ் பிடித்து (6.00 டிக்கெட்) பெஸண்ட் நகர் சென்று பீச்சிற்கு சென்றோம். பீச்சில் அரை மணி நேரம் நடந்தோம்; பின்னர் 20 நிமிஷங்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தோம். அடுத்து, தண்ணீர் அருகே சென்றோம். வெறும் காலோடு சமுத்திர மணலில் நடப்பதே தனி சுகம். தண்ணீரை பார்த்துக் கொண்டு 15 நிமிஷம் போக்கினோம்.   அடுத்து, 15 நிமிஷம் நடந்து ஸ்ரீ வல்லப விநாயகர் கோயிலுக்குள் நுழைந்தோம். சாயரக்ஷை தீபாராதானை பார்த்தோம்..இந்த விநாயகர்  எனக்கு மிகவும் பிடித்த விநாயகர். பெஸண்ட் நகரில் இருந்தபோது வாரத்திற்கு 5 முறையாவது செல்வேன். மீண்டும் மினி பஸ் - வீடு திரும்பினோம்; மனசுக்கு மகிழ்ச்சியாக ஒரு இனிய மாலைப் பொழுது. ஆண்டவனுக்கு கோடி நமஸ்காரங்கள். ராஜப்பா 16-07-2014

சூரிய உதயம்

சூரியோதயம். பெஸண்ட்நகர் வந்ததிலிருந்தே ஒரு வருஷத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட தினம்தோறும் காலையில் தவறாமல் பீச்சில் walk போவது எனது வழக்கமானது. பாகவதம் கேட்டுவிட்டு 6-45க்குப் பிறகுதான் கடலோரம் செல்வேன். எனவே சூரியோதயத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறவில்லை. இந்த மாசமாவது சூரிய உதயத்தை பார்த்து விட உறுதி கொண்டேன். சனிக்கிழமை, ஜனவரி 22ஆம் தேதி காலை 6-15க்கே விஜயாவும் நானும் வீட்டை விட்டு கிளம்பினோம். 6-36க்குத்தான் உதயம் என பேப்பரில் படித்ததால், 6-30 வரை பீச்சில் நடந்தோம். இந்த வருஷம் சென்னையில் “குளிர்” கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால். காலை 6-15 மணிக்கு குளுகுளுவென்று நன்றாக இருந்தது. 6-30க்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து உதயத்திற்காக காத்திருந்தோம். 6-34க்கு அடிவானத்தில் சிகப்பு வண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அன்று மேகங்கள் இருந்ததால், சூரியனின் முதற் கிரணங்கள் 6-40க்குத்தான் புலப்பட்டன. 6-45க்கு தக தகவென சிகப்பு நிற சூரியன் கடலிலிருந்து கிளம்பியது - பரவசமான ஒரு காக்ஷி. வானமே ஒளிமயமானது. என்னுடைய ஃபோன் காமி்ராவிலிருந்து .. 6-50 வரை சூரிய உதயத்தை ரசித்துவிட்டு, உள்ளத்திலே மக...

இயற்கையின் இன்னொரு பக்கம்.

இயற்கையின் கொள்ளை அழகை (விரிந்து பரந்த வங்கக்கடலை வர்ணித்து) போனமுறை எழுதியிருந்தேன் . இன்று (19-5-2010) இயற்கையின் இன்னொரு அழகிய பக்கத்தைப் பற்றி ...   நேற்று முதல் கடலில் காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாகவும், அதனால் சென்னையில் பலத்த மழையும், காற்றும் இருக்குமென சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இரவு முழுதும் பெரிய தூற்றல்களாக மழை பெய்து கொண்டேயிருந்தது. காலையில் “ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து” ஊரே இருட்டாக இருந்தது. மழையும் இருந்தது. காலை 6 1/2 மணிக்கு விஜயாவும் நானும் மழையிலேயே குடை பிடித்துக் கொண்டு கிளம்பினோம். பீச் பக்கம் சென்றால், அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டு உயரம் உயரமாக எழும்பிக் கொண்டிருந்தன. தண்ணீர் அருகில் சென்றோம். நாங்கள் இருவர் மட்டுமே அங்கு இருந்தோம். ஆர்ப்பரிக்கும் அலைகளைப் பார்க்க பார்க்க, மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆள் உயரத்திற்கு அல்லது இரண்டு ஆள் உயரத்திற்கு அலைகள் எழும்பின. இதுவரை சாதுவாக, அலையின் ஓசையே அதிகம் கேட்காமல், மென்மையாகத் “தளும்பிக்” கொண்டிருந்த கடலா இது? என்ன ஒரு மாற்றம்! இயறகையின் இன்னொரு பக்கமும் அழகுதான். பத்து நிமிஷங...

மெரீனா பீச்சில் நாங்கள் !!

இன்று (8-5-2010) மாலை மெரீனா கடற்கரை செல்லலாம் என எண்ணி, 5 மணி சுமாருக்கு பஸ் நிறுத்தத்தில் போய் நின்றோம். வரும் பஸ்களில் எல்லாம் மந்தை மந்தையாக மனித கூட்டம் இறங்கி உள்ளூர் கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். எல்லாமே வேறு பஸ்கள்; மெரீனா செல்லாத பஸ்கள். 1/4 மணி, 1/2 மணி, 40 நிமிஷங்கள் மெரீனா செல்லும் பஸ்ஸிற்காக காத்திருந்து, ஏமாந்து பின்னர் நாங்களும் உள்ளூர் பீச்சிற்கே சென்றோம்!! KALEIDOSCOPE என்று சொல்வார்களே, கடற்கரையில் KALEIDOSCOPE OF HUMANITY இருந்தது. ஒரு மணி நேரம் இருந்துவிட்டு வீடு திரும்பினோம். மெரீனா பீச் செல்லும் எங்கள் முதல் முயற்சி இவ்வாறாக பிசுபிசுத்து போயிற்று !! ராஜப்பா இரவு 8 மணி 8-5-2010

இயற்கையின் கொள்ளை அழகு

காலை வேளையில், ஏழு மணி சுமாருக்கு, வங்கக் கடலை பார்த்திருக்கிறீர்களா? சூரியன் கிழக்கே உதித்து, சிறிதே மேல் எழும்பி தன்னுடைய பொன்னிறக் கிரணங்களை தண்ணீர் மேல் அள்ளித் தெளித்திருப்பான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மொத்த நீர்ப் பரப்பும் சூரிய ஒளி பட்டு, தகத் தகவென தங்கத் தாம்பாளமாக, பளபளக்கும் வெள்ளித் தட்டாக காட்சி அளிக்கும் -  இந்த அழகு மனதை அள்ளிக் கொண்டு போகும். தினந்தோறும் காலை நான் இந்த கண்கொள்ளா இயற்கை அழகை ரசித்து, எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என அவனுக்கு நன்றி சொல்கிறேன். ராஜப்பா காலை 10:30 மணி 04-05-2010