Skip to main content

Posts

Showing posts with the label Pothikai TV

ஸ்ரீமத் ராமாயணம் - பால காண்டம்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் ராமாயண உபன்யாஸம் சென்ற 31 மார்ச் 2012 முதலாக சொல்லி வருகிறார். (பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30 மணிக்கு). இதைப் பற்றி நான் எழுதியதை இங்கு படிக்கலாம் . ராமாயணம் மொத்தம் 6 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பால காண்டம் என்பது முதல் காண்டம். இதில் 77 ஸர்கங்கள் உள்ளன. அயோத்யா மஹாராஜனான தசரதனுக்கு ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் என 4 பிள்ளைகள் பிறந்தது முதல்,  அந்த நால்வருக்கும் மிதிலையில் திருமணம் முடியும் வரை பால காண்டம் சொல்லுகிறது. ப்ரஹ்மரிஷி விஸ்வாமித்திரரின் யாகத்தை ராமர் காத்தது, ராக்ஷசி தாடகையை அழித்தது, பின்னர் அவரும், தம்பி லக்ஷ்மணனும் விஸ்வாமித்திரருடன் மிதிலா நகரம் நோக்கி சென்றது, நடுவில் கௌஸிக முனிவரின் பத்னியாகிய அகல்யாவிற்கு சாப விமோசனம் அளித்தது, மிதிலா ராஜ்யத்தின் அரசனான ஜனக மஹாராஜாவின் சிவதனுஸை முறித்தது, பின்பு ஜனகனின் புத்ரியாகிய ஸீதாவை ராமர் கல்யாணம் செய்து கொண்டது, பரசுராமரின் கர்வத்தை அடக்கியது போன்றவை பால காண்டத்தில் முக்கியமாக விளக்கப்படுகின்றன. ஸீதா கல்யாணத்தை பஜனை ஸம்ப்ரதாயத்தில் ...

Srimad Ramayanam - Sri Velukkudi Krishnan

ஸ்ரீராமாயணம். 100th Episode ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இவைகளுக்கு அடுத்து, தற்போது ஸ்ரீராமாயணம் சொல்லி வருகிறார். கீதை சொல்ல ஆரம்பித்தது 18 ஜனவரி 2007-ல். 735 நாட்கள் சொன்னபிறகு, 6 நவம்பர் 2009-ல் கீதை நிறைவு பெற்றது. பின்னர் ஸ்ரீமத் பாகவத புராணம் சொல்ல ஆரம்பித்தார். 621 நாட்கள் சொன்னார்; 2012 மார்ச் 30-ஆம் தேதி நிறைவு. முடித்த அடுத்த நாளே ( 31-03-2012 அன்று ) ஸ்ரீராமாயணம் சொல்ல ஆரம்பித்தார், ஞாயிற்றுக்கிழமை ஆனபோதிலும் அன்று ஸ்ரீராம நவமியானதால் ஆரம்பித்து விட்டார். பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30 லிருந்து 6-45 வரை சொல்லி வருகிறார். முதல் ஆறு ஏழு நிமிஷங்க்ளுக்கு ஏதாவ்து ஒரு ராமர்/ஆஞ்சநேயர் கோயிலை காண்பித்து, கோயிலைப் பற்றிய விவரங்களை விஸ்தாரமாக விளக்குகிறார்; பின்னர் வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களிலிருந்து ராமகாதையை சொல்லுகிறார். திங்கள் கிழமை ஆரம்பித்து ஒரு கோயிலை குறித்து தினமும் வெள்ளி வரை சொல்வார்; அடுத்த திங்கட்கிழமை வேறு ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்வார். இன்று ( 17-08-2012 வெள்ளி ) ராமாயணத்தின் 100-வது பகுதி யை சொ...

Srimad Ramayanam - Velukkudi Sri Krishnan Swamigal

Rama + Ayana translating roughly to "Rama's journey" is the oldest epic (itihasa), apart from Mahabharat, in Indian culture. Written by the saint Valmiki in about 5th to 4th century BC, this epic has 6 kandas (காண்டங்கள்) - பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம். (ஏழாவது காண்டமாக உத்தர காண்டம் சொல்லப்படுகிறது, ஆனால் இது வால்மீகியால் எழுதப்படவில்லை, பின்னால் சேர்க்கப்பட்டது என அறிஞர்கள் கருதுகிறார்கள்). 645 ஸர்க்கங்களும், 24000 ஸ்லோகங்களும் அடங்கியது. 1.    பால காண்டம் = 77 ஸர்கங்கள் -- 2266 ஸ்லோகங்கள் 2.    அயோத்யா காண்டம் = 119 ; 4185 3.    ஆரண்ய காண்டம் = 75;  2441 4.    கிஷ்கிந்தா காண்டம் = 67;  2453 5.    சுந்தர காண்டம் = 68;   2807 6.     யுத்த காண்டம் = 128;  5675 7.     உத்தர காண்டம் = 111;  3373 ஸ்லோகங்கள் மொத்தம், 7 காண்டங்கள்;  534+111 = 645 ஸர்கங்கள்; 19827...

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்.

வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30-லிருந்து 6-45 வரை உபந்யாஸம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் 18-ஜனவரி-2007 வியாழனன்று பகவத்கீதை சொல்ல துவங்கினார். மொத்தம் 735 உபந்யாஸம் செய்தார்; இறுதியில், 06-நவம்பர்-2009 அன்று கீதை நிறைவு பெற்றது. 09-நவம்பர்-2009 அன்று ஸ்ரீமத் பாகவத புராணம் ஆரம்பித்தார். 12 ஸ்கந்தங்கள் கொண்ட ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீமன் நாராயணனின் 10-அவதாரங்களையும், மற்றும் பல பெருமைகளையும் விளக்குகிறது. முக்கியமாக கண்ணனின் அவதார பெருமைகளை சொல்லுகிறது (10-வது ஸ்கந்தம்). 621 பகுதிகளுக்குப் பிறகு, இன்று (30-03-2012, வெள்ளிக்கிழமை) ஸ்ரீமத் பாகவதமும் நிறைவுற்றது. 735 + 621 = 1326 நாட்கள். 5 வருஷங்களுக்கும் மேலாக (18-01-2007 முதல் 30-03-2012 வரை) இந்த உபன்யாஸங்களை நானும் விஜயாவும் ஒரு நாள் தவறாமல், தினமும் குளித்து, கேட்டு வருகிறோம். 18 ஜனவ்ரி 2008-ல் நான் எழுதியதை மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகிறேன்: “சென்ற 2007-ஆம் வருஷம் ஜனவரி முதல் வாரத்தில் என நினைக்கிறேன் - நானும், விஜயாவும் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவப் பெரு...

ஸ்ரீமத் பாகவதம் - 600-வது பகுதி

வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று (01 மார்ச் 2012) தனது 600-வது உபந்யாஸத்தை செய்தார். சென்ற சில ஆண்டுகளாக ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவத புராணத்தை பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30க்கு சொல்லி வருகிறார். இன்று 01-03-2012 வியாழன் இதன் தொடர்ச்சியாக 600-வது உபந்யாஸத்தை செய்தார். ஸ்கந்தம் 11, அத்தியாயம் 30, ஸ்லோகம் 28. ராஜப்பா 01 மார்ச் 2012 காலை 8 மணி பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30க்கு ஸ்ரீமத் பாகவதம் ஒளிபரப்பாகிறது. 2009 நவம்பர் 9-ஆம் தேதியன்று துவங்கியது.

பஞ்ச ரதன கீர்த்தனைகள்.

மார்கழி மாசம் கிருஷ்ண பக்ஷம் பஞ்சமி திதியில் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் அவதரித்தார். கர்னாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் முதல்வரான இவரது ஜன்ம திதியன்று ஒவ்வொரு வருஷமும் கும்பகோணம் அருகில் உள்ள திருவையாறு புண்ணிய ஸ்தலத்தில் - இவரது ஸமாதியில் -  நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் கூடி இவர் இயற்றிய “பஞ்ச ரதன கீர்த்தனைகளை” ஓர் குரலில் பக்தியோடு பாடுகிறார்கள். இந்த வருஷம் (2012) 13-ஜனவரி-2012 வெள்ளிக்கிழமை இன்று காலை 8-30 மணிக்கு ஆராதனை துவங்கியது. பொதிகை டீவியில் நேரடி ஒளிபரப்பு. "ஜகதானந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக" என்ற ஸ்ரீராமரைக் குறித்த பாட்டோடு.  ஆராதனை ஆரம்பித்தது. அடுத்து 2-வதாக - "துடுகு கல நன்னேதொர கொடுகுட்ரோசுரா எந்தோ" என்ற கீர்த்தனை. இதுவும் ஸ்ரீராமரை வேண்டும் பாடல் ” ஸாதிஞ்செனே ஓ மனஸா - போதிஞ்சின ஸன் மார்க்க வசனமுல பொங்கு ஜேஸிதா பட்டின பட்டு" என்பது மூன்றாவது. இதுவும் ஸ்ரீராமரை வேண்டிக் கொள்ளும் பாடல்தான். 4-வது - "கன கன ருசிரா கனக வஸன நின்னு - தின தின முனு மனஸூன சனுவுன நின்னு" என்று ஆரம்பிப்பது. "அனுதினமும் என் மனதில் அன்பு ப...