Skip to main content

Posts

Showing posts with the label Valmiki Ramayanam

யுத்த காண்டம்

யுத்த  காண்டம். வால்மீகி ராமாயணம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ஆக ஐந்து காண்டங்களை முடித்து விட்டார். கடைசியாக சுந்தர காண்டத்தை 17-04-2014 அன்று நிறைவு பண்ணினார். 18-04-2014 வெள்ளிக்கிழமை முதல் யுத்த காண்டம் தொடங்கினார். [பகுதி 531] ஸ்ரீ ராமாயணத்தின் ஆறாவது காண்டம் இது. கடைசி காண்டமும், நீளமான காண்டமும் இது. ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தோடு 128 ஸர்கத்தோடு யுத்த காண்டம்  நிறைவு பெறும். ஸ்ரீராமர் ஹனுமானை ஒரு நல்ல காரியம் செய்து முடித்தற்காக மகிழ்கிறார். இனி லங்காவிற்கு எப்படி செல்வது என எல்லாருடனும் கலந்து ஆலோசிக்கிறார், சுக்ரீவன் ஆலோசனைகளைக் கேட்டு, ராமன் ஹனுமானை அழைத்து லங்காவை விவரிக்குமாறு கேட்கிறார். ஹனுமானும் விளக்க, ராமன் கடலை கடப்பதற்கு நல்ல முஹூர்த்தம் குறிக்கிறார். [ ஸர் 4] லங்காவ...

Valmiki Ramayanam - 600

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபந்யாஸம் 2012-ஆம் வருஷம் ஏப்ரல் 01-ஆம் தேதியன்று (அன்று ஸ்ரீராம நவமி) ஆரம்பித்தார். இரண்டு வருஷங்களுக்கு மேல் ஓடிவிட்டன; இன்று (24 ஜூலை 2014) உபந்யாஸத்தின் 600- வது பகுதி. இந்தர்ஜித் செலுத்திய ப்ரஹ்மா அஸ்த்திரத்தினால் மயக்கமுற்று கீழே விழுந்த ஸ்ரீ ராமனையும், ஸ்ரீ லக்ஷ்மணனையும் உயிர்ப்பிக்க, “சஞ்சீவனி” முதலான நான்கு மூலிகைகளை கொண்டு வருமாறு ஜாம்பவான் ஹனுமானிடம் ஆணையிட, ஹனுமான் இமயமலை நோக்கி புறப்படுகிறார். [யுத்தகாண்டம், 74 ... வது ஸர்கம்] இதுவரை அவர் சொல்லியுள்ள 600-ல் குறைந்தது 595-ஐ நானும், விஜயாவும் கேட்டிருப்போம். எல்லாருக்கும், ஸ்ரீ ஹனுமான், ஸீதம்மா ஸமேத ஸ்ரீ ராமர் ஆகியோர் அருள் பாலிக்கட்டும். ஸ்ரீராமஜெயம். rajappa 24-07-2014  

வால்மீகி ராமாயணம் - 500

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் 2012ம் வருஷம் மார்ச் 31-ஆம் தேதி யன்று ( அன்று ஸ்ரீ ராம நவமி) ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் உபன்யாஸம் பண்ண ஆரம்பித்தார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம் சொல்லி முடித்து, தற்போது சுந்தர காண்டம் கணையாழி பெற்றது சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த உபன்யாஸத்தின் 5 00 -வது பகுதி சென்ற வியாழனன்று (2014 மார்ச் 6 அன்று) நடந்தது. பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 06-30 முதல் 06-45 வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுவரை கேட்காதவர்கள் இனியாவது கேட்டு ஸீதம்மா ஸமேத ஸ்ரீ ராமரின் அருள் பெறுங்கள். ராஜப்பா 7-3-2014

Kishkindha Kaandam - Part 1

கிஷ்கிந்தா காண்டம். வால்மீகி ராமாயணம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம் ஆக மூன்று காண்டங்களை முடித்து விட்டார். இன்று 2013 செப்டம்பர் 11 புதன்கிழமை. 374-வது பகுதியாக கிஷ்கிந்தா காண்டம் தொடங்குகிறது. மொத்தம் 67 ஸர்கங்கள்.  ஸ்ரீ ஹனுமானை முதன்முதலாக சந்திக்கப் போகிறோம். ரா மனும் லக்ஷ்மணனும் பம்பா ஏரியின் (பம்பா என்றால் தாமரை) அழகை ரசிக்கிறார்கள். ராமனுக்கு ஸீதையின்  ஞாபகம் வந்து அவனை துன்புறுத்துகிறது. மலைப்பகுதியில் ஒளிந்து வாழும் சுக்ரீவன் இவர்களைப் பார்த்து சந்தேகம் கொண்டு பயப்படுகிறான். ஆயுதங்கள் கொண்டு இருவரையும் தாக்க எண்ணுகிறான். வாலிதான் வந்துவிட்டான் என வானரங்கள் அஞ்சுகிறார்கள். இப்போது ஹனுமான் முதன்முதலாக அறிமுகமாகிறான். “அஞ்சாதே! எதற்கும் பயப்படாதே!! என்பதுதான் ஹனுமானின் சொல். {ஸர் 2] தானே சென்று அவர்களை பார்த்து வருவதாக ஹனுமான் புற...

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் - 400

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் 2012ம் வருஷம் மார்ச் 31-ஆம் தேதி யன்று ( அன்று ஸ்ரீ ராம நவமி) ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் உபன்யாஸம் பண்ண ஆரம்பித்தார். பால காண்டம், அயோத்யா காண்டம் சொல்லி முடித்து, தற்போது ஆரண்ய காண்டம் வாலி வதம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த உபன்யாஸத்தின் 400-வது பகுதி சென்ற வியாழனன்று (2013 அக்டோபர் 17 அன்று) நடந்தது. பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 06-30 முதல் 06-45 வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுவரை கேட்காதவர்கள் இனியாவது கேட்டு ஸீதம்மா ஸமேத ஸ்ரீ ராமரின் அருள் பெறுங்கள். ராஜப்பா 17-10-2013

ஸ்ரீமத் ராமாயணம் - அரண்ய காண்டம் பகுதி 2

ஆரண்ய காண்டம்  - மூன்றாவது காண்டம். மொத்தம் 75 ஸர்கங்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் 2013 மே 27 திங்கட்கிழமை (298) ஆரம்பித்தார். முதல் 44 ஸர்கங்களை பகுதி-1 ல் பார்த்தோம். பொய் மான் வேஷத்தில் வந்த மாரீசனை ராமன் கொன்றதும், மாரீசன் “ஸீதா ! லக்ஷ்மணா !” என ராமன் குரலில் ஓலமிட்டு இறந்ததையும், ராமன் ஆஸ்ரமத்திற்கு விரைந்ததையும் படித்தோம். இனி .... 45வது ஸர்கம். ராமனின் குரல் கேட்டும் லக்ஷ்மணன் அண்ணனின் உதவிக்குப் போகாமல் ஆஸ்ரமத்திலேயே இருப்பது கண்டு ஸீதா அவனை ஏசுகிறாள். லக்ஷமணன் எவ்வளோவோ எடுத்துக் கூறியும் ஸீதா அவனை கேட்பதாக இல்லை. அவளது வற்புறுத்தல் காரணமாக லக்ஷ்மணன் ராமனைத் தேடி புறப்படுகிறான். (ஸர் 45) லக்ஷ்மணன் அந்தப் பக்கம் போனதும், இந்தப் பக்கமாக ராவணன் வருகிறான். போலி சாமியார் வேஷம் தரித்து ராவணன் வருகிறான். ஸீதாவின் அழகை வர்ணித்து அவளை போற்றுகிறான். ஸீதையும் அவனை உள்ளே அழைத்து ஆசனம் அளித்து உட்கார்ந்து சாப்பிட சொல்கிறாள். (ஸர் 46) முதலில் அவனை ப்ராஹ்மண சந்நியாசி என நினைத்த ஸீதாவிற்கு, பின்னர் அவனது சுய சொரூபம் தெரியவருகிறது.  தன்னை மணந்து கொள்ளுமா...