Skip to main content

Posts

Showing posts with the label Srimad Ramayanam

ஸ்ரீமத் ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 1

ஆரண்ய காண்டம்  - மூன்றாவது காண்டம். மொத்தம் 75 ஸர்கங்கள். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் 2013 மே 27 திங்கட்கிழமை (298) ஆரம்பித்தார். ராமர், ஸீதை, லக்ஷ்மணன் மூவரும் தண்டகாரண்யம் அடைந்து அங்குள்ள பல ரிஷிகளை வணங்கி வழிபட்டனர். அரண்யம் என்றால் “காடு”. அரண்யங்கள் ஞானத்தின் உறைவிடங்கள் என நம் முன்னோர் நம்பினர்; எனவேதான் இந்த காண்டத்திற்கு அரண்ய காண்டம் என பெயர் வந்தது. முதலில் விராட வதம் செய்தார். ராமர் அழித்த முதல் ராக்ஷசன். சரபங்க முனிவரை காப்பாற்ற இவனை அழித்தார். தீனஜன பரிரக்‌ஷணா வின் முதல் செய்கை. பின்னர் சரபங்க முனிவரை சந்தித்தனர். ராமனை சந்திப்பதற்காகவே முனிவர் காத்திருந்தார்; சந்தித்ததும் அவர்  ராமனுக்கு அவன் எங்கே போகவேண்டும் என சொல்லிவிட்டு, யோக அக்னியில் விழுந்து ப்ரம்ஹாவிடம் போய் விடுகிறார். [ 2 - 5] மற்ற பல ரிஷிகள் ராமனை சந்தித்து ராக்ஷசர்களை அழிக்குமாறு விண்ணப்பிகின்றனர். ராமனும் சம்மதிக்கிறான். பின், சரபங்கர் சொன்னவாறே, சுதீக்க்ஷண முனிவரிடம் செல்கிறான். ஓரிரவு அவரது ஆஸ்ரமத்தில் தங்கிவிட்டு அவர்கள் செல்கிறார்கள். ”அரக்கர்களை ஏன் அழிக்க வேண்டும்?, ” என்ற ஸீத...

ஸ்ரீமத் ராமாயணம் - அயோத்யா காண்டம் - 3வது பகுதி

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினம்தோறும் காலை 06:30 க்கு ராமாயணம் உபன்யாஸம் செய்து வருகிறார். 23/02/2013 அன்று நான் அயோத்யா காண்டம் 64வது ஸர்கம் எழுதினேன். அதன் தொடர்ச்சி. துக்கம் தாளாமல் தசரத மஹாராஜா இறந்து போகிறார். செய்தி கேட்ட கௌஸல்யா தேவி அழுது அரற்றி கைகேயியை திட்டுகிறாள். அரசன் இல்லாமல் ஒரு நாடு இருக்கக் கூடாது என சொல்லி, வஸிஷ்டர் ஒரு புதிய அரசனிற்கு முடிசூட்ட எண்ணுகிறார். பரதனை கூட்டி வர ஆட்களை அனுப்புகிறார் [ஸர்கம் 65 - 68] அவர் அனுப்பிய ஆட்களும் பரதன் இருப்பிடத்துக்கு செல்கிறார்கள். கேகேய ராஜாவிடம் பரதனை அனுப்புமாறு விண்ணப்பிக்கிறார்கள். அவரும் சம்மதிக்கிறார். பரதனும் அயோத்யா செல்கிறான். எல்லா விஷயங்களையும் அறிந்து அவன் மிகவும் துக்கப்படுகிறான். [ 69 - 72 ] தன அம்மா கைகேயியை திட்டுகிறான். ராமன் தான் ராஜா, நான் அவனை கூட்டி வருவேன் என சொல்கிறான். தந்தை தசரதனுக்கு சரயு நதி தீரத்தில் இறுதி சடங்குகளை செவ்வனே செய்து முடிக்கிறான். {72 -76] பட்டம் வேண்டாம் என மறுத்து விட்டு, ராமனை கூட்டி வர சுமந்திரனுடனும் சேனைகளுடனும் காடு நோக்கி புறப்படுகிறான். சேனைகள...

Srimad Ramayanam - Sri Velukkudi Krishnan

ஸ்ரீராமாயணம். 100th Episode ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இவைகளுக்கு அடுத்து, தற்போது ஸ்ரீராமாயணம் சொல்லி வருகிறார். கீதை சொல்ல ஆரம்பித்தது 18 ஜனவரி 2007-ல். 735 நாட்கள் சொன்னபிறகு, 6 நவம்பர் 2009-ல் கீதை நிறைவு பெற்றது. பின்னர் ஸ்ரீமத் பாகவத புராணம் சொல்ல ஆரம்பித்தார். 621 நாட்கள் சொன்னார்; 2012 மார்ச் 30-ஆம் தேதி நிறைவு. முடித்த அடுத்த நாளே ( 31-03-2012 அன்று ) ஸ்ரீராமாயணம் சொல்ல ஆரம்பித்தார், ஞாயிற்றுக்கிழமை ஆனபோதிலும் அன்று ஸ்ரீராம நவமியானதால் ஆரம்பித்து விட்டார். பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30 லிருந்து 6-45 வரை சொல்லி வருகிறார். முதல் ஆறு ஏழு நிமிஷங்க்ளுக்கு ஏதாவ்து ஒரு ராமர்/ஆஞ்சநேயர் கோயிலை காண்பித்து, கோயிலைப் பற்றிய விவரங்களை விஸ்தாரமாக விளக்குகிறார்; பின்னர் வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களிலிருந்து ராமகாதையை சொல்லுகிறார். திங்கள் கிழமை ஆரம்பித்து ஒரு கோயிலை குறித்து தினமும் வெள்ளி வரை சொல்வார்; அடுத்த திங்கட்கிழமை வேறு ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்வார். இன்று ( 17-08-2012 வெள்ளி ) ராமாயணத்தின் 100-வது பகுதி யை சொ...

Srimad Ramayanam - Velukkudi Sri Krishnan Swamigal

Rama + Ayana translating roughly to "Rama's journey" is the oldest epic (itihasa), apart from Mahabharat, in Indian culture. Written by the saint Valmiki in about 5th to 4th century BC, this epic has 6 kandas (காண்டங்கள்) - பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம். (ஏழாவது காண்டமாக உத்தர காண்டம் சொல்லப்படுகிறது, ஆனால் இது வால்மீகியால் எழுதப்படவில்லை, பின்னால் சேர்க்கப்பட்டது என அறிஞர்கள் கருதுகிறார்கள்). 645 ஸர்க்கங்களும், 24000 ஸ்லோகங்களும் அடங்கியது. 1.    பால காண்டம் = 77 ஸர்கங்கள் -- 2266 ஸ்லோகங்கள் 2.    அயோத்யா காண்டம் = 119 ; 4185 3.    ஆரண்ய காண்டம் = 75;  2441 4.    கிஷ்கிந்தா காண்டம் = 67;  2453 5.    சுந்தர காண்டம் = 68;   2807 6.     யுத்த காண்டம் = 128;  5675 7.     உத்தர காண்டம் = 111;  3373 ஸ்லோகங்கள் மொத்தம், 7 காண்டங்கள்;  534+111 = 645 ஸர்கங்கள்; 19827...