Skip to main content

Posts

Showing posts with the label Asthika Samajam

ஸ்ரீராமனின் கல்யாண குணங்கள் - வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள்

வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சென்னை ஆழ்வார்பேட்டை ஆஸ்தீக ஸமாஜத்தில் இந்த 2011 மார்ச் 29-30-31 ஆகிய மூன்று தினங்கள் தினமும் மாலை 6-30க்கு உபன்யாஸங்கள் நிகழ்த்தினார். அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு :: “ ஸ்ரீராமனின் கல்யாண குணங்கள்” வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்திற்கு நாரதர் வந்தார்; அவரிடம் ஒரு பதினாறு கல்யாண குணங்களைப் பட்டியலிட்டு, இந்த 16 குணங்களும் ஒருவனிடத்தில் ஒரே சமயத்தில் இருக்குமா, அப்படியென்றால் யார் அந்த மனிதன் என்று சொல்ல முடியுமா என வால்மீகி கேட்டார். ஒரே வார்த்தையில் “ஸ்ரீ ராமன்” என நாரதர் பதிலளித்தார். இந்த 16 குணங்களையும் வேளுக்குடி தனக்கே உரித்தான தெளிய தமிழில் சலசலத்து ஓடும்  காவிரியாக, பொங்கிப் பெருகும் கங்கையாக - வால்மீகியையும், கம்பரையும், ஆழ்வார்களையும் நம் கண் முன்னே நிறுத்தி விளக்கிச் சொன்னார். மிக அருமையாக இருந்தது. உபன்யாஸம் பண்ணிய 2 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ராஜப்பா 01-04-2011 காலை 1000 மணி

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day3

28 ஜுன் 2009 ஞாயிற்றுக்கிழமை (நாள் 3) இன்று நாங்கள் வழக்கத்தை விட 5 நிமிஷங்கள் தாமதமாக ஆஸ்திக ஸமாஜத்தை அடைந்தோம். வாசலில் குங்குமம், சந்தனம், சர்க்கரை, கல்கண்டு கொடுத்து "கல்யாண வரவேற்பு." வந்திருந்த பெண்மணிகள் அனைவருக்கும் மல்லிகைப் பூ கொடுத்தார்கள்! நிறையப் பேர் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புஷ்பம் அடங்கிய தாம்பாளங்களை எடுத்துவந்தனர். 4 - 5 பேர் பருப்புத்தேங்காய் (ஜோடி)கொண்டுவந்து மேடையில் வைத்தனர். நாம் வந்திருப்பது உபன்யாஸத்திற்கா, இல்லை இடம் மாறி கல்யாண மண்டபத்திற்கு போய்விட்டோமா என ஒரு கணம் வியந்து போனோம். மதுரா திரும்பி வந்தது. பல அஸுரர்களை அனுப்பியும் கண்ணனை கொல்ல முடியாததால், கண்ணனை மதுராவிற்கே அழைத்து கொல்ல கம்ஸன் திட்டமிட்டான். அக்ரூரன் என்பவனை அழைத்து, பிருந்தாவனம் சென்று கண்ணனை அழைத்து வருமாறு உத்தரவிட்டான். அக்ரூரனும் கோகுலம் புறப்பட்டான். அவன் கிருஷ்ண பக்தன் என்பதால் அவனுக்கு கொள்ளை ஆனந்தம், கண்ணனை நேரில், அருகில் பார்க்க இயலும் என்பதால். தனுர்யாகம் என்று அக்ரூரன் பொய்க்காரணம் சொன்னாலும், கண்ணனுக்கு உண்மை தெரியும். கம்ஸ வதத்திற்கு வேளை வந்துவிட்டது. ஆயர்பாடி ச...

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day2

27 ஜுன் 2009 சனிக்கிழமை (நாள் 2) கிருஷ்ணனின் லீலைகள் இன்றும் நாங்கள் மாலை 5 மணிக்கே ஆஸ்திக ஸமாஜத்திற்குச் சென்றுவிட்டோம். சரியாக 6-30க்கு ஸ்ரீமதி விஷாகா ஹரி தன் ஸங்கீத உபன்யாஸத்தை ஆரம்பித்தார். குழந்தை கண்னன் கோகுலத்தில் தன் அம்மா யஸோதாவிடம் செய்த லீலைகளுடன் உபன்யாஸம் களை கட்டியது. கண்ணன் மண் தின்றது. ஒரு நாள் பலராமனும், மற்ற சிறுவர்களும் யஸோதாவிடம் வந்து, கண்ணன் மண் தின்றதாக புகார் கூறினர். வாயைத்திறந்து காட்டுமாறு அவள் கேட்க, கண்ணன் தான் மண் திங்கவேயில்லை, பலராமனும், மற்றவர்களும் பொய் சொல்கிறார்கள் என்று சாதித்தான். யஸோதா விடாமல் வற்புறுத்தவே, கண்ணன் தன்னுடைய லீலையை ஆரம்பித்தான், குஞ்சு வாயை ஆவென்று திறந்து காட்டினான். பார்த்த யஸோதா வியப்பில் ஆழ்ந்தாள் - குழந்தையின் வாயில் அண்ட சராசரங்களும், பலப்பல கண்டங்களும், பாரத வர்ஷமும், பரத கண்டமும், அதனுள்ளே குட்டி கிருஷ்ணனும் - அந்த கண்ணன் வாயில் மீண்டும் அண்ட சராசரங்களும், கண்டங்களும், பாரத வர்ஷமும், மீண்டும் குட்டிக் கண்ணனும், அந்த குட்டிக் கண்ணன் வாயில் --- என தொடர்ந்து கொண்டே போயிற்று. யஸோதாவிற்கு "யார் இந்தக் குழந்தை" என ஒரே வி...

ஸ்ரீகிருஷ்ண லீலா - விஷாகா ஹரி VISHAKHA HARI Day1

Day 1 : வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2009 கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான். ஜூன் 26, 27, 28 தேதிகளில் ஆஸ்திக ஸமாஜத்தில் ஸ்ரீமதி விஷாகா ஹரியின் “ ஸ்ரீ கிருஷ்ண லீலா ” உபன்யாஸம் நடைபெறும் என்ற அறிவிப்பைப் பார்த்து, நேற்று (26) மாலை 5 மணிக்கும் முன்னதாகவே நானும் விஜயாவும் ஆஸ்திக ஸமாஜத்தில் ஆஜர். வழக்கம்போலவே கூட்டம் நிரம்பி வழிந்தது. சரியாக 6-30க்கு விஷாகா ஹரி உபன்யாஸத்தை ஆரம்பித்தார். பாரத தேசத்தில் யாருடைய புண்ய கதை அதிகமாக சொல்லப்படுகிறது, கேட்கப்படுகிறது, எழுதப்படுகிறது, படிக்கப்படுகிறது, பாட்டு எழுதப்படுகிறது, பாடப்படுகிறது என்று பார்த்தோமானால், அது ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியதாகத்தான் இருக்கும். சந்தேகமேயில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் சரித்ரம் விஷ்ணுபுராணம், ஸ்ரீமத் பாகவதம் போன்று 4 நூல்களில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும், ஸ்ரீமத் பாகவதத்தில் இன்னும் விரிவாக் சொல்லப்பட்டிருப்பதால், தான் பாகவதத்தையே பின்பற்ற இருப்பதாக விஷாகா சொன்னார். ப்ரஹ்மா >> வஸிஷ்டர் >> சக்தி >> பராசரர் >> வ்யாஸர் இவர்கள் வம்சத்தில் வ்யாஸருக்கு மகனாகப் பிறந்தவர் ஸ்ரீசுகர் . அர்ஜுனனின் மகன...

Vishaka Hari and Sri Venkatadri Mahatmiyam

ஸ்ரீமதி விஷாகா ஹரி உபன்யாஸம். ஸ்ரீ வெங்கடாத்ரி மஹாத்மியம். பேப்பர்களில் இந்த உபன்யாஸத்தைப் பற்றி அறிவிப்புகள் வந்தன. ஜூன் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜத்தில் மூன்று நாட்களுக்கு தினமும் மாலை 6-30 முதல் 8-30 வரை இருக்கும் என அறிவித்திருந்தனர். Most Mesmerising விஷாகா ஹரி என்றால் கூட்டம் அதிகமாக வரும் என்பது தெரிந்ததே; எனவே, அன்று மாலை 4-45க்கே 12-B பஸ் பிடித்து ஆஸ்திக சமாஜத்திற்கு 5-10க்கு போய்விட்டோம். 5-10க்கே 70% நிரம்பி விட்டது. வேதபாராயணம் முதலில் நடந்தது. ஆனால் ஏதோ காரணத்தினால் விஷாகாவின் உபன்யாஸம் அன்று நடைபெறவில்லை. கூட்டம் கலைந்து போய்விட்டது. மறுநாள் ( 7-6-2008, சனிக்கிழமை ) மாலை 4-30க்கே கிளம்பினோம். அர்விந்த் காரில் எங்களை கொண்டு விட்டான். 5-30க்கு முன்பாகவே ஹால் பிதுங்கி வழிந்தது - என்ன ஒரு கூட்டம் ! வேத பாராயணத்திற்கு பிறகு, சரியாக 6-30க்கு உபன்யாஸம் துவங்கியது. Trademark 9-கஜம் மடிசார் பட்டு புடவை, வாய் நிறைய மலர்ந்த சிரிப்பு, கணீர் குரல் - விஷாகா ஹரி ஸ்ரீவெங்கடாத்ரி மஹாத்மிய உபன்யாஸத்தை ஆரம்பித்தார். எள்ளு போட்டால் எள்ளு விழும் நிசப்தத்...