Skip to main content

Posts

Showing posts with the label Sundara Kandam

வால்மீகி ராமாயணம் - 500

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் 2012ம் வருஷம் மார்ச் 31-ஆம் தேதி யன்று ( அன்று ஸ்ரீ ராம நவமி) ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் உபன்யாஸம் பண்ண ஆரம்பித்தார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம் சொல்லி முடித்து, தற்போது சுந்தர காண்டம் கணையாழி பெற்றது சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த உபன்யாஸத்தின் 5 00 -வது பகுதி சென்ற வியாழனன்று (2014 மார்ச் 6 அன்று) நடந்தது. பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 06-30 முதல் 06-45 வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுவரை கேட்காதவர்கள் இனியாவது கேட்டு ஸீதம்மா ஸமேத ஸ்ரீ ராமரின் அருள் பெறுங்கள். ராஜப்பா 7-3-2014

ஸுந்தர காண்டம் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளைப் பற்றி (Sri Velukkudi Krishnan)ஏற்கனவே எழுதியுள்ளேன், தினமும் அவர் சொல்லும் கீதை உபன்யாஸத்தைத் தவறாமல் கேட்டு வருகிறேன். ( இங்கே படிக்கவும்). ஸ்ரீ வேளுக்குடி அவர்கள் "ஸுந்தர காண்டம்" பற்றி ஒரு உபன்யாஸம் செய்துள்ளார். VCD (2) விலை ரூ. 150.00 DVD ரூ. 250.00. விசிடியை 2008 ஜனவரி 25-ஆம் தேதியன்று கிரியில் (Giri Traders, Mylapore) வாங்கினேன். நேற்று (8-2-2008) வெள்ளிக்கிழமை இதைக் கேட்டோம். இரண்டு விசிடிக்களும் சேர்த்து சுமார் இரண்டு மணி 30 நிமிஷங்கள் ஓடுகின்றன. வேளுக்குடியை (Velukkudi Krishnan) பற்றி சொல்ல புதிதாக என்ன இருக்கிறது? அதே கம்பீர, கணீர் குரல், தங்கு தடையற்ற இனிய தமிழ் ஓட்டம், எல்லாருக்கும் புரியும்படியான எளிய சொற்கள். வால்மீகியும், கம்பரும், ஆழ்வார்களும் மிக சரளமாக வந்து போகிறார்கள். மிக அற்புதமாக உள்ளது. ஸுந்தர காண்டத்தை ஸ்ரீமதி விஷாகா ஹரி (Srimathy Vishakha Hari) யின் குரலில், இன்னிசையில் ஏற்கனவே கேட்டுள்ளோம். ( இங்கே ) இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்னைப் பொறுத்தவரையில், விஷாகா ஹரி இன்னிசைத் தேன். வேளுக்குடி ஸ்லோக மஹாச...

ஸுந்தர காண்டம் Vishakha Hari

"கண்டேன் ஸீதையை" ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் ஸுந்தர காண்டம் பிரசித்தி பெற்றது. ஸ்ரீராமபிரானிடத்து மெய்யடிமையும், உண்மைப் பக்தியும் வாய்க்கப் பெற்றுள்ள ஹநுமானின் வீரச்செயல்கள் இக்காண்டத்துள் மிக விரித்துக் கூறப்பட்டுள்ளன். மொத்தம் 68 ஸர்க்கங்கள் கொண்டது. ஹநுமான் சமுத்திரத்தைத் தாண்டி லங்கைக்கு போனதிலிருந்து ஆரம்பிக்கிறது. மஹேந்திர பர்வதத்திலிருந்து கிளம்பி, மைநாக பர்வதத்தை தாண்டி, அரக்கி ஸூரஸையின் வாயில் நுழைந்து புறப்பட்டது, அரக்கி ஸிம்ஹிகையை அழித்து லங்கை சென்றது - அங்கு ஸீதையைத் தேடியது, அசோக வனத்திற்கு சென்றது, அங்கு ஹநுமான் ஸீதையைக் கண்டது, ஸீதையின் கஷ்டத்தைப் பார்த்து துக்கம் கொண்டது, பின்பு ஹநுமான் ஸ்ரீராம காவியத்தை ஆரம்பத்திலிருந்து பாடியது, ஸ்ரீராமனுடைய கணையாழியை ஸீதையிடம் அளித்தது, ஸீதை தன்னுடைய சூடாமணியை ஸ்ரீராமருக்குக் கொடுத்தது, ஆஞ்சநேயர் அசோக வனத்தை அழித்தது, நிறைய அரக்கர்களை அழித்துக் கொன்றது, ராவணன் சபைக்குச் சென்று அவனுக்கு உபதேசம் செய்தது, ஆஞ்சநேயரின் வாலில் அரக்கர்கள் தீ வைத்தது, அந்த தீயினிலாயே லங்கையை அழித்தது, பின்னர் ராமனிடம் திரும்பி வந்து ...