சென்னை அடையாரிலிருந்து 25 கிமீ தூரத்தில் OMR எனப்படும் பழைய மஹாபலிபுரம் ரோடில் (now, Rajiv Gandhi Salai) உள்ள படூர் என்னும் இடத்தில், அருண் ஒரு 2 BHK Flat க்கு முன்பதிவு செய்தான். இதற்கான பதிவு (Registration) 19-11-2009 அன்று திருப்போரூர் என்னும் ஊரில் (படூரிலிருந்து மஹாபலிபுரம் நோக்கி இன்னும் 10 கிமீ தூரம்) sub-registrar அலுவலகத்தில் நடந்தது ( விவரங்கள் இங்கே ) வீடு கட்டி முடித்தபின் வீட்டிற்கான சாவி ஏப்ரல் 2011-ல் அருணிடம் வழங்கப்பட்டது. ஏற்கனவே க்ருஹ ப்ரவேஸத்திற்கான முஹூர்த்தம் ஃபிப்ரவரி 16 என நிச்சயிக்கப்பட்டு இருந்தது; ஆனால், சாவி கிடைக்காததால், முஹூர்த்தம் ஏப்ரல் 17, 2011 (ஞாயிற்றுக்கிழமை) என மீண்டும் நிச்சயிக்கப்பட்டது. கிருஹப் ப்ரவேஸத்திற்கான வேலைகள் முழுமூச்சுடன் ஆரம்பிக்கப் பட்டன்; எல்லாரையும் ஃபோன் மூலமே அருண் - காயத்ரி அழைத்தனர். அருகிலுள்ள ஓரிருவரை மட்டும் நேரில் சென்று அழைத்தனர். சாஸ்திரிகள், உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய உடைகள் வாங்கப்பட்டன. எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன, முஹூர்த்தமும் வந்தது. ஏப்ரல் 16 (சனிக்கிழமை) புது வீட்டிற்கு காயத்ரி சென்று வீட...