Skip to main content

Posts

Showing posts with the label gold coins

பொன்னை விரும்பும் பூமியிலே ...

பொன் (GOLD) ஒரு சேமிப்பாக கருதலாமா? அல்லது, சேமிப்பு (investment) என்ற முறையில் தங்கம் வாங்குவது அவ்வளவு சிறந்தது இல்லையா? மனதிலே ஆயிரம் எண்ணங்கள். இருந்தும், துணிந்து நேற்று மாலை - என் 67 வருஷ வாழ்க்கையில், விஜயாவின் 59 வருஷ வாழ்க்கையில் முதல் முறையாக - தங்கம் (காசு) வாங்கினோம், ஓரிரண்டு கிராம்களே. எதற்கும் “முதல் முறை” வேண்டுமல்லவா? பொன்காசு, மற்றும் பொன் நகைகள் வாங்கும்போது, பல சங்கேதக் குறியீடுகளை சந்திக்க வேண்டி வரும் - சேதாரம் (wastage) என்பது ஒன்று. தங்கத்தை உருக்கி நகையாக செய்யும்போது சில மைக்ரோகிராம்கள் நஷ்டமாகிவிடும்; இந்த இழப்பை நம்மிடமிருந்து பணம் வாங்கி ஈடு செய்து கொள்வார்கள். சேதாரம் என்பது செய்யும் நகையைப் பொறுத்தது. நாம் வாங்கும் கடையையும், அந்தக் கடைக்கு நாம் எவ்வளவு “விசுவாசமானவர்கள்” என்பதையும் பொறுத்தது. 15% லிருந்து 18% வரை சேதாரம் இருக்கக்கூடும். 16 கிராம் எடைக்கு நகை வாங்கினால், 16 கிராமுக்கு 15% ஆன 2.4 கிராம் தங்கத்திற்கு பணம் சேதாரமாக வசூலிக்கப்படும்! அடுத்த குறியீடு “செய்கூலி” (making charges) என்பதாகும். இதுவும் மேற்சொன்ன 3 விஷயங்களையே பொறுத்தது. சாதாரண வேலை...