Skip to main content

Posts

Showing posts with the label Ja Ra Su

Paamara Geethai - by Ja Ra Su

எழுத்தாளர் ஜ ரா சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள் தற்போது பாமர கீதை என எழுதிக் கொண்டிருக்கிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பார்த்தனுக்கு சாரதியாக இருந்து கொண்டு அவனுக்கு உபதேசித்த கீதையை (அதன் சாராம்சத்தை) எளியவர்களுக்கும் புரியும்படி, அவர்களது மொழியில் எழுதியுள்ளார். மிக அருமை, அருமையிலும் அருமை. கிஷ்டன், பார்த்தன் இருவரும் சென்னை வாழ் ரிக்‌ஷாக்காரர்கள். பார்த்தனுக்கு வரும் சந்தேகங்களை போக்கி அவனுக்கு நல்வழி கூறுபவன் கிஷ்டன். ஆடி மாசத்தில் ஆத்தாவிற்கு (காளி அம்மனுக்கு) கூழ் ஊற்ற காசு போதவில்லை என்பது பார்த்தனின் வருத்தம், ஆற்றாமை. அதற்கு கிஷ்டன் (ஸ்ரீ கிருஷ்ண பகவான்) என்ன சொல்லி பார்த்தனை தேற்றுகிறான் --- படியுங்கள் .... ”கூழ் ஊற்றுவதும் பக்திதான். அது நம்ம சக்திக்கு முடியாதென்றால்” ....  இனி மேற்கொண்டு. -----******----- கிஷ்டன் : அவசரப்படா​தே. ஒரு நல்ல மனுஷன் ​சொல்ற புத்திமதிப் ​பேச்​சைக் ​கேட்கறது... இப்ப வாரியார் சாமி ​பேச்சு மாதிரி எங்ஙனா நடக்குது. இல்​லே. எங்கனாச்சும் யாராச்சும் ராமியாணம், பாரதம் படிக்கறாங்க... அங்​கே ​போய்க் குந்திக்கிணு ​கொஞ்ச ​நேரம் ​கேளு. அது...