Skip to main content

Posts

Showing posts with the label Maavadu

மயிலாப்பூரும், மாவடுவும் .. Mylapore and Maavadu

கோடை காலத்திற்கான் முன் அறிவிப்பு அறிகுறிகளில், மயிலாப்பூர் தெற்கு மற்றும் வடக்கு மாட வீதிகளில் மாவடு வரவு முக்கியமான ஒன்று. தெற்கு மாட வீதியில் கொட்டி வைத்திருக்கும் மாவடுக்களை பார்க்கும்போதே நம் வீட்டு பெண்களுக்கு கைகள் உதற ஆரம்பித்து விடும்; உடம்பும் என்னவோ பண்ணும். அந்த க்ஷணமே மாவடுக்களை வாங்கி, ஊறுகாய் போட கை துறுதுறுக்கும். விஜயாவும் இந்த உலக நியதிக்கு விலக்கு அல்ல - விதவிதமாக ஊறுகாய் போடுவதில் அவள் ஒரு எக்ஸ்பர்ட். இந்த 2009 வருஷம் விஜயாவை முந்திக்கொண்டு விட்டாள் எங்கள் காயத்ரி! வாசலில் வந்தது என 2 படி மாவடு வாங்கி, விஜயாவிடமிருந்து செய்முறை கேட்டறிந்து, காயத்ரி ஊறுகாய் போட்டுவிட்டாள். ஊறுகாய்க்கு தேவைப்படும் கல்லுப்பு, மிளகாய்ப் பொடி (ஹைதராபாத் பொடி) ஆகியவைகளை விஜயா தயார் பண்ணிக்கொண்டு, மாவடு 5 படி (படி 20.00) வாங்கி ஊறுகாய் போட்டாள். இப்போது தினமும் தொட்டுக்க மாவடுதான். இதோ இன்று - 10 ஏப்ரல் - மயிலாப்பூரிலிருந்து ஹைதராபாத்துக்கு 5 படி மாவடு பயணம் செய்கிறது. ராஜப்பா 8:10 இரவு, 10-04-2009