Skip to main content

Posts

Showing posts with the label Homam

Bhima Ratha Santhi

பீமரத சாந்தி (17-7-2011) ஒருவருக்கு 69 வயசு முடிந்து 70 தொடங்கும்போது பீமரத சாந்தி பண்ணுவது வழக்கம். நான் 1941-ல் பிறந்தவன்; எனவே 2011-ல் 69 முடிந்தது. என் பிள்ளைகள் மூவரும் பீமரத சாந்தி பண்ணிக் கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள்; புது வீட்டில் அதுவும் சொந்த வீட்டில் பண்ணிக் கொள்வது இன்னும் விசேஷமானது; எனவே மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டேன். என்னுடைய நக்ஷத்திரம் 2011, ஜூலை 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தது. ஒருநாள் முன்பு அதாவது ஜூலை 16-ஆம் தேதி காலை 7 மணிக்கு இதைப்பற்றி என்னிடம் அர்விந்த் முதன்முதலாக சொன்னான். VERY VERY SUDDEN DECISION. எல்லா காரியங்களையும் அர்விந்த - கிருத்திகா இருவரும் ஃபோன் மூலமே முடித்தனர். அருண், அஷோக் ஆகியோருக்கு சொல்லி அவர்களும் வர சம்மதித்தனர். அஷோக் உடனே காரில் (பெங்களூரிலிருந்து) கிளம்பியே விட்டான் !! வரும் வழியில் ஹோசூரிலிருந்து சாவித்திரியையும் கூட்டி வந்தான். உறவினர் எல்லாரையும் ஃபோன் மூலமாகவே அழைத்தோம்; சாஸ்திரிகளுக்கும் அவ்வாறே! சாமான்களையும் உடனேயே வாங்கினோம். அஷோக் நீரஜா சாவித்திரி மூவரும்  பகல் 4-30க்கு வந்தனர். அர்விந்த சாஸ்திரிகள் சாமா...