Skip to main content

Posts

Showing posts with the label Koil

Marghazhi 2011 மார்கழி மாசம்

நேற்று மார்கழி மாசம் பிறந்தது.    விடியற்காலம் எழுந்து , பச்சைத் தண்ணீரில் குளித்து , தோய்த்து உலர்த்திய ஆடைகளை உடுத்திக் கொண்டு திருப்பாவை , திருவெம்பாவை பாடிய பின்னர் , அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று ஸ்வாமியை தரிசிக்க ஆரம்பித்து விட்டேன் . இன்று [18-12-2011] காலை அருகிலுள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலுக்கும் , பிறகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கும் சென்று வந்தேன் . ராஜப்பா 18-12-2011 7-45 காலை.

மயிலாப்பூர் கோயில்கள்

சுமார் 2 வருஷங்கள் ஆகியிருக்கும் என எண்ணுகிறேன் - மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேஸவனை தரிஸித்து. இன்று (18-01-2011) போனோம். மாலை 4-30க்கு கிளம்பி, கோயிலுக்குப் போனோம். முதலில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை தரிசித்துக் கொண்டோம். பின்னர், ஸ்ரீ வேதாந்த தேஸிகர் கோயிலுக்குச் சென்றோம். பளிச்சென்று விளக்குகள் போட்டு, பெயிண்ட் அடித்து கோயிலே ஜொலித்தது. ஹயக்கிரீவர், ஸ்ரீநிவாஸப் பெருமாள், அலமேலு மங்கா தாயார் , கருடாழ்வார், ஆண்டாள் ஆகியோரை தரிசித்துக் கொண்டு, அருகிலுள்ள ஸ்ரீ ஆதிகேஸவப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். மிகப் பழமையான கோயில். மரகதவல்லி தாயார்.பேயாழ்வாரின் புனித ஸ்தலம். கேஸவப் பெருமானின் கோயில் குளத்தில் அவதரித்தார் என்பது வரலாறு. எல்லா சன்னதிகளிலும் தரிசித்துக் கொண்டோம். என்னுடைய நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. அடுத்து, ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். கூட்டம் அதிகமில்லை. நல்ல தரிசனம் கிடைத்தது. சில கடைகளுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது மணி 7-15. ராஜப்பா மாலை 8:20 மணி 18-01-2011

மார்கழி - 2010_11

இந்த வருஷம் (2010-11) மார்கழி மாதம் டிசம்பர் 16-ஆம் தேதியன்று துவங்கியது. அன்று தொடக்கம் நானும் விஜயாவும் தினம் தினம் விடியற்காலையில் எழுந்து, குளித்து கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனையும், விநாயகரையும், மற்ற தெய்வங்களையும் நமஸ்கரித்து வருகிறோம். மார்கழி மொத்தம் 30 நாட்களில், 4 நாட்கள்தான் கோயிலுக்கு. போக இயலவில்லை. பெரும்பாலான நாட்களில் சுடச்சுட வெண்பொங்கல் / சக்கரைப் பொங்கல் பிரஸாதம் கிடைக்கப் பெற்றோம்.   இந்த வருஷம் சென்னையில் குளிர் (வழக்கத்தைவிட) கொஞ்சம் அதிகம். அந்தக் “குளிரில்” நடந்து செல்வதே மிகப் பெரிய இனிய அனுபவமாக இருந்தது. இன்றோடு (ஜன 14) மார்கழி நிறைவு பெறுகிறது. இரவு 8-30 மணி சுமாருக்கு தை பிறக்கிறது. இனி கோயில்கள் வெறிச்சோடி இருக்கும், ஸ்வாமிக்கு அபிஷேகம் முதலானவை தாமதமாகத்தான் நடக்கும். எல்லாருக்கும் மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காமல்   விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருக இந்த மார்கழியில் எங்களை ஆசீர்வதித்தது போலவே,  மீண்டும் அடுத்த வ...

காஞ்சிபுரம் - Kanchipuram Dec 2010

சென்ற வாரம் 2010, டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை யன்று நான், விஜயா, அஷோக், நீரஜா ஆகிய நால்வரும் காஞ்சிபுரம் சென்றோம். காலை 6-45க்கு அர்விந்த் காரில் பெஸண்ட்நகரிலிருந்து கிளம்பினோம். போரூர், ஸ்ரீபெரும்பூதூர் வழியாக சென்றோம். சென்னையிலிருந்து 68 கிமீ தூரத்தில் (காஞ்சியிலிருந்து 9 கிமீ) உள்ள ”வேடல்” என்ற கிராமத்தில்  முதலில் காரை நிறுத்தி அங்கு சங்கர மடத்தினர் புதிதாக அமைத்துக் கொண்டிருக்கும் சில பகுதிகளைப் -பார்த்தோம். இது சென்னை-பெங்களூர் சாலையில் சுமார் 68-வது கிமீட்டரில் L & T Factory (Blue color building) அடுத்து இருக்கிறது. சிவன் சிலையை ரோட்டிலிருந்தே பார்க்கலாம். சங்கரமடம் மற்றும் அதன் பக்தர்கள் இணைந்து 65 அடி உயர சிவன் சிலையும், 32 அடி உயர நந்தியையும் இங்கு உருவாக்கியுள்ளனர். சுப்பையா என்ற சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி இந்தச் சிலைகளை உருவாக்கியுள்ளார். இதனை 18/10/2010 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்து மக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணித்தார்.   இந்த சிவன் பீடத்தின் அடியில் தஞ்சையில் ...

மயிலாப்பூர் இன்று.

இன்று (27-09-2010) மாலை மயிலாப்பூர் சென்றோம். அடுத்த பத்து நாட்களில் (அக் 8 ஆம் தேதி முதல்) நவராத்திரி பண்டிகை வர இருப்பதால், மயிலாப்பூர் இப்போதே களை கட்டி விட்டது. காதி கிராமோத்யோக் கடையிலும், வடக்கு மாட வீதி முழுதும் பொம்மைகள் குவிந்துள்ளன. எவ்வளவு பொம்மைக் கடைகள் ! அம்மாடியோவ். அழகு, அழகான பொம்மைகள். விலையைக் கேட்கவில்லை - மயக்கம் போட்டு விடுவேனோ என்ற பயம்தான். வடக்கு மாட வீதியில் உள்ள விஜயா பூஜைப் பொருட்கள் கடை என்னமாக ஜொலிக்கிறது! நவராத்ரிக்கு வேண்டிய சாமான்கள் கொட்டிக் குவிந்துள்ளன, வண்ண வண்ணமாக. அடுத்த வாரத்தில் கடையினுள் நுழைவதே கஷ்டமாக இருக்கும். கடை பெரிதாக்கப் பட்டுள்ளது. 2 - 3 வருஷங்களுக்கு முன்னால், இந்தக் கடை இவ்வளவு பெரியதாக இல்லை. சுக்ரா ஜுவல்லரியிலும் புதுப் புது வெள்ளி சாமான்கள் நவராத்திரி ஸ்பெஷல் குவிக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல கறிகாய்கள் நிறைய்ய இருந்தன. காலிஃப்ளவர், வெண்டைக்காய், கொத்தமல்லி வண்டி வண்டியாக இருந்தன. பழங்களும் இவ்வாறே - கொய்யா, வாழை, ஆப்பிள், திராக்ஷை, மற்றும் ஆச்சரியகரமாக ஸீதாப் பழங்கள் குவிந்திருந்தன. தேங்காய், புஷ்பங்களைப் பற்றி எழுதவே வேண்...