Skip to main content

Posts

Showing posts with the label Sri Varalakshmi Vratham

Our BANGALORE Visit 8 August 2016

OUR BANGALORE VISIT  8-AUG-  to 27 AUG 2016 After our Thiruvananthapuram visit, we returned to Chennai on the morning 0f 1st AUG. Then, we left for Bangalore by Double Decker train on the morning of Monday the 8th Aug. 9-8-2016 Today was my mother's 107th Birthday. 10-8-2016 A Long walk, and purchased battery for Vijaya's watch 13-8-2016 Fri    We all went to RSM house for Varalashmi Poojai 15-8-2016 Mon We two went to SUBRAMANI KUMAR's (my Periyamma Peran) house. Met him for the first time, his wife GEETHA, 2nd son NIKHIL and 1st son's wife VINIDHINI. Nice people. Returned to Ashok's place by 8-30PM. Old B&W photos of periyamma periyappa 16, 17,  Walking in the evening 18-8     YAJUR UPAKARMA at Ashok's place. 19-8     SRI VARALAKSHMI POOJAI, GAYATHRI JAPAM. 20-8    Krishnaraj and family visited us at BTM. 22-8 Monday    We two visited SriVidya house and also TR V...

Sri Varalakshmi Vratham by Gayathri

ஸ்ரீ வரலக்ஷ்மி வ்ரதம். காயத்ரி போன வாரம் - 12-08-2011 வெள்ளிக்கிழமை - வரலக்ஷ்மி விரத பூஜை பண்ணவில்லை. அதனால், அவள் இந்த வெள்ளிக்கிழமை 19-08-2011 அன்று பூஜை பண்ணினாள். விஜயாவும் நானும் வியாழன் மாலை 4 மணிக்குக் கிளம்பி, 5 மணி சுமாருக்கு படூர் போய்ச் சேர்ந்தோம். விஜயா காயத்ரிக்கு சிலபல உதவிகள் செய்தாள். அருண் கடைத்தெருவிற்கு சென்று பூஜை சாமான்கள் வாங்கி வந்தான். அன்றிரவு நாங்கள் அங்கேயே தங்கினோம். மறுநாள் வெள்ளியன்று காலை குளித்து பூஜைக்கு தயாரானோம். நைவேத்தியங்களை செய்து, காயத்ரியும் தயாரானாள். காலை 10 மணிக்கு நான் மந்திரங்கள் சொல்ல, காயத்ரி பூஜை ஆரம்பித்தாள்.11மணி சுமாருக்கு பூஜை நிறைவுற்றது. தேங்காய் கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, வடை, பாயஸம் செய்து நிவேதனம் பண்ணினாள். சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் தூங்கி எழுந்தோம். மாலை 4 மணிக்கு கிளம்பி திருவான்மியூருக்கு 5 மணி அளவில் வந்து சேர்ந்தோம். போகும்போது “சொகுசு” பஸ்ஸிலும் (13.00) திரும்பும்போது ஏஸி பஸ்ஸிலும் (33.00) வந்தோம்.  இவ்வாறாக, இந்த வருஷம் வரலக்ஷ்மி பூஜை பண்டிகை நன்கு நடந்தது. ராஜப்பா 20-08-2011 3 PM

Sri Varalakshmi Vratham - 2011

12-08-2011, வெள்ளிக்கிழமை: எல்லாருடைய வீடுகளைப் போலவே எங்கள் வீட்டிலும் இன்று ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதம் நன்கு நடைபெற்றது. முதல் நாளே பூஜைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து நிறைய முடிந்து விட்டன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கிருத்திகாவால் பூஜையில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே 12-ஆம் தேதியன்று விஜயா மட்டுமே பூஜை செய்தாள். சொந்த வீட்டில் நடக்கும் முதல் வரலக்ஷ்மி பூஜை இது. காலையில் சீக்கிரமே எழுந்து பூஜைக்கான, நைவேத்தியத்திற்கான வேலைகளை விஜயா செய்ய ஆரம்பித்தாள். உதவிக்கு கிருத்திகாவின் அம்மா வந்தார். நான் பூஜையை 10-15க்கு ஆரம்பித்தேன். மந்திரங்களை நான் சொல்ல, விஜயா பூஜை செய்தாள். கூடவே அதிதியும் செய்தாள். சிறப்பாக நடந்தது. 11-30 சுமாருக்கு முடிந்தது. விஜயா பாயஸம், வடை, இட்லி, இரண்டு வித கொழுக்கட்டைகள் (எள், தேங்காய்), மற்றும் ஒரு கறி, ஒரு கூட்டுடன் சாப்பாடு பண்ணினாள். கிருத்திகாவின் பெற்றோர் இங்கு சாப்பிட்டனர். ஸௌம்யா, ஸ்ரீராம் இருவரும் அருணுடன் வந்தனர். அவர்களும் இங்கு சாப்பிட்டனர். இவ்வாறாக, இந்த வருஷ பூஜை வெகு விமரிசையாக நடந்தது. எல்லாருக்கும் எங்கள் நமஸ்காரங்கள். ...

Sri Varalakshmi Vratham - 2010

Varalakshmi Vratham was celebrated this year (2010) on 20 Aug. Vijaya started preparations like Idli maavu, kuzhakkattai maavu, cleaning of the vesseles, decorating the mandapam etc on the previous day/night itself. Krithika was also very busy. It was a hectic day's work for both. On 20th, Vijaya got up by 5 and started work. Krithika was busy in decorating mandapam and the Amman itself. Gayathri also came early and started helping. Rice, Idli, vadai, two types of kuzhakkatai, Panchamrutam etc were prepared. Arun, Sowmya, Sriram also came. Arvind had gone to office. When everything was ready, I started the poojai at 0945; i chanted the poojai-slokas and Vijaya, Gayathri, Krithika (and Aditi) performed the poojai. We had kept three mukhams for the poojai. It was completed by 1100. All five (Sowm and Aditi incl) tied the sacred SARADU on their right wrists. Afterwards, we had lunch. Evening, a few guests came to have Amman's darshan. TSG and mami came; so did Sruthi for S...

ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை

ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை. இன்று ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை - ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை. எல்லார் வீடுகளிலும் நடந்தது போலவே எங்கள் வீட்டிலும் பூஜை சிறப்பாக நடந்தது. நேற்று மாலை மயிலாப்பூர் (வேறு எங்கு, தெற்கு மாட வீதிக்குத்தான் !) சென்று பழங்கள், புஷ்பங்கள் (விலையை மட்டும் கேட்டு விடாதீர்கள் - தாழம்பூ 50 ரூ !!) வாங்கி வந்தோம். அம்மனை அலங்கரித்து மற்ற ஏற்பாடுகளையும் விஜயா , காயத்ரி இருவரும் செய்தனர். அவர்களுக்கு கூடமாட ஒத்தாசையாக இரண்டு குட்டிகளும் இருந்தார்கள் (ஒத்தாசையாக .. ??) இன்று விடியற்காலை சீக்கிரமே எழுந்து, ஸ்நானம் முடித்து, பூஜைக்கான ஏற்பாடுகள், இட்லி வடை, பாயசம், இரண்டு வித கொழுக்கட்டைகள் இன்ன பிற செய்து, பூஜையை ஆரம்பிக்கும் போது மணி 9-30. நான் மந்திரம் சொல்ல, விஜயாவும் காயத்ரியும் பூஜை செய்தனர். பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து பூஜை முடியும்போது 10-45 ஆகி விட்டது. வீட்டிலே பூ, பழம், போன்று நெறய்ய சாமான்கள் இருந்தது, ரெண்டு குட்டிகளுக்கும் ஒரே குஷி. எல்லாவற்றையும் வாரி கொட்டி, சந்தன கிண்ணத்தில் குங்குமத்தை கொட்டி, ஆப்பிள்களை DUKES பந்துகளாக நினைத்து பௌன்சர்கள் போட்டு...