Skip to main content

Posts

Showing posts with the label Adi Kesava Perumal

மயிலாப்பூரில் நாங்கள் 31-1-2012

நேற்று (31 ஜனவரி) எங்கள் [41-வது] திருமண ஆண்டு நாள். மாலை 4-15 க்கு வீட்டிலிருந்து கிளம்பி, மயிலாப்ப்பூர் மசூதி தெருவிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலு க்குச் சென்றோம். ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு சாத்திக் கொண்டு தரிஸனம் அளித்தார். அவரையும், ஸீதா சமேத ஸ்ரீ ராமரையும் சேவித்து விட்டு, ஸ்ரீ வேதாந்த தேஸிகர் கோயிலுக்கு நடந்தோம். ஸ்ரீ அலமேலு தாயார் ஸமேதராக ஸ்ரீநிவாஸப் பெருமாள் இங்கு எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் புன்னகை தவழும் முகத்தோடு மிகவும் அழகாக காட்சியளிக்கிறார்; அவரது அழகில் நம் மனசு கொள்ளை போய்விடுகிறது. மிக அருகில் நின்று பெருமாளை நீண்ட நேரம் சேவித்தோம். 250 வருஷங்களுக்கு முன்னால் முதலில் இங்கு வேதாந்த தேஸிகர் கோயில் மட்டும் தான் இருந்தது; பின்னர் சமீபத்தில் 1924-ல் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் நிறுவப்பட்டது. இங்குள்ள லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்ரீ வேதாந்த தேஸிகரின் “உபாஸன தெய்வம்”; மிக சக்தி வாய்ந்தவர். கோயிலில் சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ நரஸிம்ஹர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. அடுத்து, ஸ்ரீ ஆதிகேஸவ பெருமாள் கோயில். மிகவும் பழமையானது. 12 ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீ பேயாழ்வார் அவதரி...

Vaikunta Ekadasi

ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஆராதிக்க மிகச்சிறந்த நாள் ஏகாதசி. ஒவ்வொரு வருஷத்தி்லும் 25 ஏகாதசிகள் உள்ளன; இவற்றில் மார்கழி மாசம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசிதான் "வைகுண்ட ஏகாதசி" என அழைக்கப்படுகிறது. இன்று உபவாஸம் இருந்து நியமத்துடன் ஸ்ரீமஹாவிஷ்ணுவை பூஜிப்பவருக்கு இம்மையில் வைகுண்டத்தைப் போன்ற சுகமும், வாழ்க்கையின் இறுதியில் ஸ்ரீவைகுண்டமும் கிடைக்கும் என்பதால் இது "வைகுண்ட ஏகாதசி" எனப்படுகிறது. நேற்று (05 ஜன 2012) வியாழன் விடிகாலையில் - பல பெருமாள் கோயில்களில், முக்கியமாக ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீஆதிகேசவ பெருமாள் - மயூரவல்லித் தாயார் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு விடியற்காலம் 4 மணிக்கு சென்று, விஜயா பெருமாளைத் தரிசித்து வந்தாள்; மாதவனை தரிசிப்பதாகத்தான் முதலில் இருந்தது; பின்னர் கேசவன் என ஆயிற்று. நல்ல கூட்டம் எனச் சொன்னாள். எதிர்வீட்டு உமா மாமி, மாமா, TSG மாமா, மாமி ஆகியோரும் சென்றனர். வந்த எல்லா பக்தர்களுக்கும் THE HINDU சார்பில் ஒரு HINDU பேப்பரும் அதனுடன் “வைகு...

மயிலாப்பூர் கோயில்கள்

சுமார் 2 வருஷங்கள் ஆகியிருக்கும் என எண்ணுகிறேன் - மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேஸவனை தரிஸித்து. இன்று (18-01-2011) போனோம். மாலை 4-30க்கு கிளம்பி, கோயிலுக்குப் போனோம். முதலில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை தரிசித்துக் கொண்டோம். பின்னர், ஸ்ரீ வேதாந்த தேஸிகர் கோயிலுக்குச் சென்றோம். பளிச்சென்று விளக்குகள் போட்டு, பெயிண்ட் அடித்து கோயிலே ஜொலித்தது. ஹயக்கிரீவர், ஸ்ரீநிவாஸப் பெருமாள், அலமேலு மங்கா தாயார் , கருடாழ்வார், ஆண்டாள் ஆகியோரை தரிசித்துக் கொண்டு, அருகிலுள்ள ஸ்ரீ ஆதிகேஸவப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். மிகப் பழமையான கோயில். மரகதவல்லி தாயார்.பேயாழ்வாரின் புனித ஸ்தலம். கேஸவப் பெருமானின் கோயில் குளத்தில் அவதரித்தார் என்பது வரலாறு. எல்லா சன்னதிகளிலும் தரிசித்துக் கொண்டோம். என்னுடைய நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. அடுத்து, ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். கூட்டம் அதிகமில்லை. நல்ல தரிசனம் கிடைத்தது. சில கடைகளுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது மணி 7-15. ராஜப்பா மாலை 8:20 மணி 18-01-2011