Skip to main content

Posts

Showing posts with the label Hanuman

Sundara Kaandam

சுந்தர காண்டம். வால்மீகி ராமாயணம். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணம் உபன்யாஸத்தை 01-ஏப்ரல்-2012 அன்று ஆரம்பித்தார். வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பொதிகை டீவியில் காலை 06:30 முதல் 06:45 வரை உபன்யாஸம் செய்கிறார். பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம் ஆக நான்கு காண்டங்களை முடித்து விட்டார். கடைசியாக கிஷ்கிந்தா காண்டத்தை 25-12-2013 அன்று நிறைவு பண்ணினார். 26-12-2013 வியாழன் முதல் சுந்தர காண்டம் தொடங்கினார். [பகுதி 450] ஸ்ரீ ராமாயணத்தின் மிக முக்கியமான காண்டம் இது. மொத்தம் 68 ஸர்கங்கள் உள்ளன. ராம தூதனாக ஹனுமான் லங்கா நோக்கிப் புறப்படுகிறார். கடலை கடக்க மேலே பறக்கிறார். இடையில் இருந்த மய்நாகா மலையை இடித்து. த்ள்ளி செல்கிறார். தன் மீது உட்கார்ந்து சிறிது இளைப்பாறி செல்லுமாறு மலை விண்ணப்பிக்கிறது. அன்புடன் அதை மறுத்து, ஹனுமான் மேலே செல்கிறார். அடுத்து சுரஸா என்னும் ராக்ஷசியின் வாயில் நுழைந்து அதே வேகத்தில் வெளியே வந்து பறக்க ஆரம்பிக்கிறார். அடுத்து ஸிம்ஹிகா என்னும் ராக்ஷசியையும் முடிக்கிறார். கரையை கடந்து லங்கா நகரை ...

Kishkindha Kaandam -- Part 2

கிஷ்கிந்தா காண்டம் --- தொடர்கிறது :: தன்னுடைய வானரங்களை நாலா பக்கமும் அனுப்பி அங்கிருக்கும் மற்ற வானரங்களை கிஷ்கிந்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். அவர்களும் பல கோடி வானரங்கள் வந்து சேர்கிறார்கள். (ஸர் 36-39) விநாடன் என்னும் பெரிய வானரத்தை அழைத்து, கிழக்குப் பக்கம் போய் தேடுமாறு சுக்ரீவன் ஆக்ஞை இடுகிறான். பாரத தேசத்தின் புவி இயலை - ஆறுகள், மலைகள், ராஜ்ஜியங்கள், ஊர்கள் - விரிவாக இந்த ஸர்கத்தில் சொல்லப்படுகின்றன. பாகீரதி (கங்கை), ஸரயூ, கௌஷிகி, யமுனை, ஸரஸ்வதி, ஸிந்து, ஷோனா, மாஹி, காலாமாஹி,  ஆகிய நதிகளும், ப்ரஹ்மமாலா, விதேஹம், மாளவம், காசி, கோஸலம்,  போன்ற ராஜ்யங்களும், மலைகளும், வனாந்திரங்களும் மிக விரிவாக சொல்ல்ப்படுகின்றன (ஸர் 40) ஹனுமான், ஜாம்பவான், நீலன், ஆகிய வானர தலைவர்களை அங்கதன் தலைமையில் தெற்கு திசை நோக்கி அனுப்புகிறான். ஒரு மாதத்திற்குள் திரும்ப வர வேண்டும் எனவும் ஆணையிடுகிறான். (ஸர் 41) தாராவின் தந்தையாகிய சுஷேஷனாவின் தலைமையில் வானரங்களை கிழக்கு திசை நோக்கி அனுப்புகிறான். இவர்களுக்கும் ஒரு மாஸம் அவகாசம் கொடுக்கிறான். (ஸர் 42) ஷடபாலி என்னும் வானரத்தின் தல...