Inspired from an article (INDIAN JUJUBE) in today's (25th Jan) New Indian Express newspaper. இலந்தம்பழம். “எலந்த பயம், எலந்த பயம் ..” என்ற பழைய தமிழ் சினிமாப் பாட்டு நினைவுக்கு வரட்டும். மிக எளிமையான, அதே சமயம் மிக ருசியான ஒரு பழம். ஸ்ரீராமனுக்கு சபரி கொடுத்த பழம். சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த பழம். ஸ்டாராபெர்ரி, கிவி போன்ற வெளிநாட்டுப் பழங்கள் முதல் தட்டிலும், ஆப்பிள், ஆரஞ்சு, திராக்ஷை, அன்னாசி போன்ற பழங்கள் இதற்கு அடுத்த தட்டிலும் உள்ள பழங்களாக இருக்கலாம்; ஆனாலும், இலந்தம் பழத்திற்கு என்னைப் போன்று தனி ரசிகர்கள் உண்டு. BHER என்று ஹிந்தியிலும் REGI என்று தெலுங்கிலும் அழைக்கப்படும் இது, பெரிய சைஸிலும் கிடைக்கிறது. பெரிய சைஸ் பழம் அவ்வளவு ருசியாக இருக்காது. இலந்தம் பழத்தை சாப்பிடும் முன், பழத்தினுள் சிறு worms இருக்கிறதா என பார்த்து, worms இல்லாத பழங்களை சாப்பிடவேண்டும். அந்த இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை பிரமாதமாக இருக்கும். சிலர் மிளகாய்த் தூள், உப்பு பிசறி இலந்தம்ப்ழத்தை சாப்பிடுவார்கள். பழத்தை இளம்சூடு வெந்நீரில் நன்றாக அலம்பி சாப்பிடுவது நல்லது....