வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் சரித்திரம் யாவரும் அறிந்த ஒன்று. 8ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் விஷ்ணுசித்தர் என்னும் ஒரு அடியார் வசித்து வந்தார். தன்னுடைய தோட்டத்திலிருந்து தினமும் பூக்கள் பறித்து ஆண்டவனுக்கு சமர்ப்பிப்பதே அவரது தொண்டாக இருந்து வந்தது. ஒரு நாள் பூப்பறிக்க சென்றபோது, ஒரு துளஸி செடியின் கீழ் ஒரு குழந்தை இருக்கக் கண்டார். குழந்தை பாக்கியம் இல்லாத விஷ்ணுசித்தர் தமபதியினர், இந்தக் குழந்தையை மிக மகிழ்ச்சியுடன் வளர்க்க ஆரம்பித்தனர். “பூமி மாதாவின் கருணை”யினால் கிடைத்த குழந்தைக்கு “கோதை” எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்தனர். விஷ்ணுசித்தர் பெரும் விஷ்ணுபக்தராதலால் அவர்கள் வீட்டில் எப்போதுமே ஸ்ரீ கிருஷ்ண பகவானைப் பற்றிய பாடல்களும் கதைகளும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையில் வளர்ந்த ஆண்டாள் கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணர் மேல் பக்தியும் ப்ரேமையும் கொள்ள ஆரம்பித்தாள். நாளடைவில் இந்த ப்ரேமை கிருஷ்ணனையே கல்யாணம் பண்ணிக்கொள்ளும் காதலாக மாறியது. விஷ்ணுசித்தர் தற்போது பெரியாழ்வார் என அழைக்கப்பட்டார். அவர் ஆண்டாளுக்கு பாவை நோன்பைப் ப...