மார்கழி மாசம் கிருஷ்ண பக்ஷம் பஞ்சமி திதியில் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் அவதரித்தார். கர்னாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் முதல்வரான இவரது ஜன்ம திதியன்று ஒவ்வொரு வருஷமும் கும்பகோணம் அருகில் உள்ள திருவையாறு புண்ணிய ஸ்தலத்தில் - இவரது ஸமாதியில் - நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் கூடி இவர் இயற்றிய “பஞ்ச ரதன கீர்த்தனைகளை” ஓர் குரலில் பக்தியோடு பாடுகிறார்கள். இந்த வருஷம் (2012) 13-ஜனவரி-2012 வெள்ளிக்கிழமை இன்று காலை 8-30 மணிக்கு ஆராதனை துவங்கியது. பொதிகை டீவியில் நேரடி ஒளிபரப்பு. "ஜகதானந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக" என்ற ஸ்ரீராமரைக் குறித்த பாட்டோடு. ஆராதனை ஆரம்பித்தது. அடுத்து 2-வதாக - "துடுகு கல நன்னேதொர கொடுகுட்ரோசுரா எந்தோ" என்ற கீர்த்தனை. இதுவும் ஸ்ரீராமரை வேண்டும் பாடல் ” ஸாதிஞ்செனே ஓ மனஸா - போதிஞ்சின ஸன் மார்க்க வசனமுல பொங்கு ஜேஸிதா பட்டின பட்டு" என்பது மூன்றாவது. இதுவும் ஸ்ரீராமரை வேண்டிக் கொள்ளும் பாடல்தான். 4-வது - "கன கன ருசிரா கனக வஸன நின்னு - தின தின முனு மனஸூன சனுவுன நின்னு" என்று ஆரம்பிப்பது. "அனுதினமும் என் மனதில் அன்பு ப...