புகழ்பெற்ற ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலுக்கு நேர் எதிரில், கீழ தேரடி வீதியில் திருநெல்வேலியின் இருட்டுக் கடை ஹல்வா கடை உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுதும் பெயர் பெற்ற கடை. ராஜஸ்தானத்திலிருந்து வந்த ஒரு குடும்பத்தினரால் 90 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்றது. இன்றைக்கும் இந்தக் குடும்பத்தின் வழி வந்தவர்களே கடையை நிர்வகிக்கின்றனர். மாலை 5 மணிக்குத்தான் கடை திறக்கும்; இரவு 10 மணிக்கு மூடிவிடுவார்கள். ஒளி தர எண்ணெய் விளக்குகள் மட்டுமே. “இருட்டுக் கடை” என்ற பெயர் வந்ததே இதனால்தான். கடை இருட்டாக இருக்கலாம்; ஆனால், ஹல்வாவின் ருசியும் மணமும்! எப்பொழுதும் நிரம்பி வழியும் கூட்டமே இதற்கு சாட்சி. கடையின் வெளியில் ஒரு சின்ன போர்டு கூடக் கிடையாது. ஆனாலும் கூட்டத்திற்கு என்னவோ குறைவே இருக்காது. பல கோடி ரூபாய்களை விளம்பரத்திற்காக செலவிடும் MNCக்கள் இந்தக்க் கடையை Marketing Study பண்ணவேண்டும். 2003ல் (சுபா - மகேஷ் திருமணத்திற்கு முன்பு) நான் தி-வேலி சென்று Mr ராஜாமணி அவர்கள் (மகேஷின் அப்பா) வீட்டில் தங்கியபோது முதல்முறையாக இருட்டுக் கடை ஹல்வா கடைக்குச் சென்றேன். 1/2 கிலோ ஹல்வா வாங்கியதாக ஞாபக...