10 ஏப்ரல் 2012 செவ்வாய்க்கிழமை. அன்றையப் பொழுது வழக்கம்போல விடிந்தது. காலை 4-15க்கு எழுந்து, குளித்து, பாராயணங்கள் படித்து, 6-30க்கு பொதிகை டீவியில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஸ்ரீராமாயணம் உபன்யாஸம் கேட்டேன். காலை 7-30க்கு, விஜயா குளித்துக் கொண்டிருக்கும் போது காய்கறி வாங்க பைகள் எடுத்துக் கொண்டு, திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் கிளம்பினேன். காய்களும் வாங்கினேன். திரும்பும் போது மார்க்கெட் வாசலில் நுங்கும் வாங்கினேன். வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடக்க ஆரம்பித்ததுதான் தெரியும் - அடுத்து நான் கண் விழிக்கும் போது ஒரு ஹாஸ்பிடலில் இருந்தேன், கூடவே விஜயாவும், அர்விந்தும் சோகமாக. என்ன ஆயிற்று எனக்கு? நான் ஏன் ஹாஸ்பிடலில் படுத்து இருக்கிறேன்? ஒன்றுமே நினைவில்லை. டாக்டர்கள் வந்து என்னை டெஸ்ட் பண்ணியதோ, பல டெஸ்ட்டுகளுக்கு ஆட்படுத்தப் பட்டதோ, அருண், காயத்ரி, கிருத்திகா, கணபதி சுப்ரமணியம், சுகவனம், சுதா, சதீஷ், ராமமூர்த்தி அத்திம்பேர் ஆகியோர் வந்தததோ ஒன்றுமே தெரியாது. Total blank. ECR-ல் ”தமிழினி” கடைக்கு அருகில் நடந்து வந்த போது, நான் திடீரென தலைகுப்புற கீழே விழுந்திருக்கிறேன். மயக்கமாகி ...