Skip to main content

Posts

Showing posts with the label Thiruppavai

Marghazhi 2011 மார்கழி மாசம்

நேற்று மார்கழி மாசம் பிறந்தது.    விடியற்காலம் எழுந்து , பச்சைத் தண்ணீரில் குளித்து , தோய்த்து உலர்த்திய ஆடைகளை உடுத்திக் கொண்டு திருப்பாவை , திருவெம்பாவை பாடிய பின்னர் , அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று ஸ்வாமியை தரிசிக்க ஆரம்பித்து விட்டேன் . இன்று [18-12-2011] காலை அருகிலுள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலுக்கும் , பிறகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கும் சென்று வந்தேன் . ராஜப்பா 18-12-2011 7-45 காலை.

மார்கழி 2010

இந்த வருஷம் (2009-2010 விரோதி) மார்கழி மாஸம் 2009 டிஸம்பர் 16ஆம் தேதியன்று பிறந்தது. முதல் நாள் நான் அருகிலுள்ள ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயிலுக்குப் போனேன் என்றாலும், அடுத்த ஒன்பது நாட்களுக்குப் போகமுடியவில்லை – உடல் நலம் சரியாக இல்லாததால் காலை வேளைகளில் வெளியே கிளம்பவே முடியவில்லை. மீண்டும் டிஸ 27-ஆம் தேதிமுதல் போக ஆரம்பித்தேன். 0415க்கு அல்லது 0430க்கே எழுந்து குளித்து, என்னுடைய வழக்கமான பாராயணங்களை சொல்லிவிட்டு, ஸ்ரீமத் பாகவதம் உபந்யாஸம் முடிந்ததும் 0645க்கு செல்வேன். ஸ்வாமி தரிஸனத்திற்குப் பிறகு சுடச்சுட வெண்பொங்கல் கிடைக்கும். ஈஸ்வரன் கோயிலிலிருந்து ஸ்ரீவரஸித்தி விநாயகர் கோயிலுக்குச் செல்வேன்; பிறகு வீடு. டிஸம்பர் 30ஆம் தேதி முதல் விஜயாவும் வர ஆரம்பித்தாள்; காலை 0515க்கு எழுந்து, குளித்து, பாராயணம் சொல்லிவிட்டு அவளும் என்னுடன் தினமும் வர ஆரம்பித்தாள். இந்த வழக்கம் மார்கழி முழுதும் நீடித்தது. தினமும் காலையில் சரோஜா அக்காவை கோயிலில் சந்திப்போம். அவள் தன் வீட்டிற்கு கிளம்பியதும் நாங்கள் விநாயகர் கோயிலுக்கும் சென்று விட்டு, வீடு திரும்புவோம். தினமும் பொங்கல் பிரஸாதம் கிடைக்கும். இத...

ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் - ஸ்ரீமதி விஷாகா ஹரி Vishakha Hari

வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் சரித்திரம் யாவரும் அறிந்த ஒன்று. 8ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் விஷ்ணுசித்தர் என்னும் ஒரு அடியார் வசித்து வந்தார். தன்னுடைய தோட்டத்திலிருந்து தினமும் பூக்கள் பறித்து ஆண்டவனுக்கு சமர்ப்பிப்பதே அவரது தொண்டாக இருந்து வந்தது. ஒரு நாள் பூப்பறிக்க சென்றபோது, ஒரு துளஸி செடியின் கீழ் ஒரு குழந்தை இருக்கக் கண்டார். குழந்தை பாக்கியம் இல்லாத விஷ்ணுசித்தர் தமபதியினர், இந்தக் குழந்தையை மிக மகிழ்ச்சியுடன் வளர்க்க ஆரம்பித்தனர். “பூமி மாதாவின் கருணை”யினால் கிடைத்த குழந்தைக்கு “கோதை” எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்தனர். விஷ்ணுசித்தர் பெரும் விஷ்ணுபக்தராதலால் அவர்கள் வீட்டில் எப்போதுமே ஸ்ரீ கிருஷ்ண பகவானைப் பற்றிய பாடல்களும் கதைகளும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையில் வளர்ந்த ஆண்டாள் கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணர் மேல் பக்தியும் ப்ரேமையும் கொள்ள ஆரம்பித்தாள். நாளடைவில் இந்த ப்ரேமை கிருஷ்ணனையே கல்யாணம் பண்ணிக்கொள்ளும் காதலாக மாறியது. விஷ்ணுசித்தர் தற்போது பெரியாழ்வார் என அழைக்கப்பட்டார். அவர் ஆண்டாளுக்கு பாவை நோன்பைப் ப...

மாஸானாம் மார்கசீர்ஷ: அஹம் ... marghazhi

" மாஸானாம் மார்கசீர்ஷ: அஹம் " (அத் 10 ஸ்லோ 35) என்று மாதங்களில் மார்கழியை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சிறப்பித்துக் கூறியுள்ளார். மார்கழி என்றதுமே ஆண்டாளும், திருப்பாவை பாசுரங்களும், கண்ணனும் நினைவுக்கு வரும். (சுடச்சுட பொங்கலுக்கு விடியலில் சீக்கிரமே கோயிலுக்குப் போக வேண்டுமாதலால், நிறையப் பேரால் ஆசையிருந்தும் அது முடிவதில்லை என்பது வேறு விஷயம்.) திருப்பாவையில் கண்ணன் ஆண்டாளுக்கு அன்பனாக வருகிறான்; கீதையில் அர்ஜுனனுக்கு நண்பனாக, உபதேஸம் செய்யும் கீதாசாரியனாக வ்ருகிறான். ஆண்டாள் காட்டிய பக்திக்கும், அர்ஜுனன் காட்டிய பக்திக்கும் ஒரு மெல்லிய வித்தியாசம் உண்டு. உங்களுடன் ஸ்கூலில் 1-வது முதல் 10-வது வரை ஒன்றாகப் படித்து பின்னர் வேறு ஊருக்கு மாறிவிட்ட உங்கள் பாலிய வயது ஸ்நேகிதன் முப்பது ஆண்டுகள் கழிந்து திடீரென சமூகத்தில் ஒரு பெரிய மனிதனாக உங்கள் முன் வந்தால், அவனை (அவரை?) எப்படி கூப்பிடுவீர்கள்? அவனுடன் (அவருடன்) எப்படி பழகுவீர்கள்?? ஸ்ரீகிருஷ்ணனை சந்திக்கப்போன ஸுதாமாவின் மனநிலை போன்று இருக்குமா? இதே DILEMMA நிலைதான் ஆண்டாளுக்கும் இருந்தது; அர்ஜுனனுக்கும் இருந்தது. இருவரும் எப்பட...

மாதங்களில் மார்கழி - 2007

மாதங்களில் நான் மார்கழி - என்றான் கண்ணன். மார்கழி பிறந்தாலே நினைவுக்கு வருவது திருப்பாவை - திருவெம்பாவை தான். (மூடநெய் பெய்து முழங்கை வழிவார - என்று சுடச்சுட வெண்பொங்கலும் கூட!!!!) 2007 ஜனவரி துவங்கி இதுநாள் வரை (திங்கள் முதல் வெள்ளி வரை) தினமும் "பகவத் கீதை" உபன்யாஸத்தை நானும் விஜயாவும் தவறாமல் கேட்டு வருகிறோம். ஸ்ரீ உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் மிக நேர்த்தியாக உபன்யாஸம் செய்கிறார். தெளிவான ஆற்று நீர் ஓட்டம்போல, தங்கு தடையற்ற இனிய தமிழ். பொதிகையில் காலை 6-30 முதல் 6-45 வரை ஒளிபரப்பாகிறது. மார்கழி 1- ஆம் தேதி முதல், திருப்பாவை - திருவெம்பாவையும் ஒளிபரப்பு ஆகிறது, காலை 6 மணிக்கே. எனவே, நான் காலை 5-15க்கே எழுந்து, குளித்து (!!), 5-45க்கு திருப்பாவை படிக்க ஆரம்பித்து விடுகிறேன். விடியலுக்குமுன் குளிப்பதே பரம ஆனந்தம். கீதை உபன்யாஸத்தைக் கேட்டு முடித்த பிறகே மற்ற வேலைகள் ஆரம்பம். சுடச்சுட வெண்பொங்கல் (தொன்னையில்) ?? அது இன்னும் கனவாகவே உள்ளது. ராஜப்பா 12-00 19-12-2007 Velukkudi Krishnan, Bhagavad Gita