Skip to main content

Posts

Showing posts with the label Ammi

Ammikkal

நமது பாரம்பரியம். மிக்ஸியும் க்ரைண்டரும் தோன்றுவதற்கு முன், சுமார் 30,35 வருஷங்களுக்கு முன்னர், வீடுகளில் அம்மிக்கல், ஆட்டு உரல், எந்திரம் போன்ற கற்களை பயன் படுத்தி வந்தோம். இன்று அம்மிக்கல்லைப் பற்றி பேசுவோம். அம்மி என்பது செவ்வகமான ஒரு கல் (rectangle); அம்மிக்கல்லில் வரும் “கல்” என்பது ஒரு குழவி. cylindrical வடிவில் இருக்கும். அம்மிக்கல்லில் அரைப்பது, பொடி பண்ணுவது போன்றவற்றை செய்யலாம். சட்னி, துவையல், சாம்பார் பொடி, ரசப் பொடி போன்றவற்றை செய்ய இது பயன் படுத்தப்பட்டது அம்மியின் மேற்பகுதி சொரசொரப்பாக இருக்கும். இதை நன்கு சுத்தப்படுத்திய பிறகு அரைக்க வேண்டியதை இதன் மேல் வைக்க வேண்டும்; தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் ஆகியவைகளை வைத்து, முதலில் சிறிது நசுக்கி கொள்ளவும். பிறகு, குழவியை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, முன்னும் பின்னும் ஓட்டினால் தேங்காய் முதலியவை அரைபடும். சிறிது சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இட்லி, தோசைக்கு சுவையான சட்னி தயார். இதே போன்று, சாம்பார் பொடி, ரஸம் பொடி, மிளகு பொடி, போன்றவற்றையும் செய்யலாம். ஜிம்முக்குப் போய் 1000, 2000 ரூ என செல...