ஊனம் மாஸியங்களுக்கான விதிகள் . ஊனங்கள் , மூத்த கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரம் , செவ்வாய் , வெள்ளி , சனி , பிரதமை , சஷ்டி , ஏகாதசி , சதுர்த்தி , நவமி , சதுர்த்தசி ஆகிய தினங்களில் பண்ணக் கூடாது . சரியான நாள் கிடைக்காவிட்டால் , குறிப்பிட்ட காலத்தின் கடைசீ நாளில் எதையும் பார்க்காமல் பண்ண வேண்டும் . 27 ஊனம் -- 28 * 29 * 30 ஆகிய மூணு நாட்களில் ஒன்றை மேலே உள்ள விதிகளின்படி அநுசரித்து தேர்ந்தெடுத்து பண்ண வேண்டும் . சோதகும்பம் பண்ணும் நாள் ஊனத்துக்கு பொருத்தமாயிருந்தால் ஊனத்தை அந்த நாளில் வைத்துக் கொள்ளலாம் . உதாரணமாக -- வியாழன் மாஸ்யம் அல்லது ஆப்திகம் , புதன் சோதகும்பம் , செவ்வாய் ஊனம் என்று ஏற்பட்டால் , செவ்வாய் சோதகும்பம் , புதன் ஊனம் , வியாழன் மாஸ்யம் ( அ ) ஆப்திகம் என மாற்றிக் கொள்ளலாம் . 45 ஊனத்திற்கு த்ரைபக்ஷகம் எனப் பெயர் . இதை 40 நாளுக்கு மேல் 45 நாட்களுக்குள் மேல்கண்ட விதியை அநுசரித்து தேர்வு செய்யவும் . 6 ம் மாஸ ஊனம் , இறந்த தினம் உட்பட 170 க்கு மேல் 180 நாட்களுக்குள் , அடுத்த திதி - மாஸ்யத்திற்கு 1 நாள் முன்னதாக விதிப்படி தேர்வு செய்யவ...