நாயர் அறைக்கு வந்த அவனுக்கும் நாயருக்கும் நிகழ்ந்த சொல்லாடல்: அவன்: “எந்தா நாயர், நீ குழம்பு சாதம் சாப்பிட்டியா? நாயர்: “சாப்பிட்டேன்” அவன்: ”ரசம் சாதம்?” நாயர்: “ஆச்சு” அவன்: “தயிர் சாதம்?” நாயர்: “அதுவும் ஆச்சு” அவன்: “ அப்றம், பழம் சாப்டிருப்பியே?!” நாயர்: “ ரெண்டு பழம் சாப்பிட்டேன்” ரெண்டு நிமிஷம் மௌனம். பின்னர், “நான் உன்னை இது சாப்ட்டியா, அது சாப்ட்டியா, பழம் தின்னியா”ன்னு கேட்டேனே, நீ ஒரு தடவையாவது, என்னை சாப்பிட்டியா?”ன்னு கேட்டியா?” என்று நாயரைக் கேட்பான். நாயருக்கு அப்போது தான் உறைக்கும். நமது கண்களில் நீர் பெருக்கெடுக்கும். எத்தனை முறை எதிர்நீச்சலை பார்த்தாலும், என் கண்ணில் நீர் வழியும் ஒரு சிலிர்ப்பான காட்சி இது. இதுதான் நாகேஷ் ! தமிழ் சினிமாவிலேயே எனக்குப் பிடித்த ஒரே நடிகர் . அவர் தனது 76 வயதில் நேற்று முன் தினம் மயிலாப்பூரில் காலமானார் என அறிந்து வருத்தப்பட்டேன். எதிர்நீச்சல் ( "நான் மாது வந்திருக்கேன்”) , நீர்க்குமிழியில் சேதுவாக, நவக்கிருகம், சர்வர் சுந்தரம், தில்லானா மோகனாம்பாளில் வைத்தி, திருவிளையாடலில் தருமி, காதலிக்க நேரமில்லை (பாலையாவிற்கு கதை விவரிக்கும் காட