தங்கத் தேர் Golden Chariot காயத்ரிக்காக அவள் பெற்றோர் வடபழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டிக் கொண்டிருந்தனர். சென்ற மார்ச் மாசம் 27 ஆம் தேதியன்று நாள் குறிக்கப்பட்டு, அதற்கான பணமும் (ரூ. 1000/-) செலுத்தப்பட்டது. நான், விஜயா, சதீஷ் ஆகிய மூவரும் அன்று பகல் 4.00 மணிக்கு அருண் வீட்டிற்குப் போனோம். அடுத்த அரைமணிக்குள் குழந்தை அதிதி அங்கு வந்தாள் (அவளை விட்டுவிட்டு க்ருத்திகா வெளி வேலையாக போய்விட்டாள்). 5 பெரியவர்கள், 3 குழந்தைகள் ஆகியோர் அருண் காரில் கிளம்பி, 6 மணி சுமாருக்கு வடபழனி முருகன் கோயிலுக்கு சென்றோம். அங்கு ஏற்கனவே காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர் வந்திருந்தனர். 7 மணிக்கு தேர் தயாராகி, கற்பூர தீபாராதனை ஆயிற்று. தேர் இழுக்க நாங்கள்தான் முதல் குடும்பம். எல்லாரும் சேர்ந்து தேர் இழுத்தோம். ஒரு சுற்று இழுத்தோம். மண்டபத்தில் உட்கார்ந்து, புளியோதரை, சக்கரைப்பொங்கல் பிரசாதம் சாப்பிட்ட பிறகு, அவரவர்கள் வீடு திரும்பினோம். வடபழனியில் கார் நிறுத்திய இடத்திலேயே குழந்தைகள் ஸௌம்யா, அதிதி, ஸ்ரீராம் மூவரும் சாப்பிட்டனர். தேர் இழுத்தது ஒரு சுக அனுபவம். முன்னதாக 2003