Skip to main content

Posts

Showing posts from April, 2010

ராஜாஜியின் ராமாயணம்

வால்மீகி, துளஸிதாஸர், கம்பர் ஆகியவர்களைத் தவிர வேறு நிறைய பேர் ராமாயணத்தை (ராம காதையை) எழுதியுள்ளார்கள். குறிப்பாக, தமிழில் “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதிய ராமாயணம் மிக பிரசித்தம். இந்த புஸ்தகம் இல்லாத வீடே அந்த கால கட்டத்தில் இருந்திருக்காது. “ராம சரித்திரத்தைத் தமிழ் மக்கள் ... எல்லாரும் படிக்க வேண்டும். படித்தால் நல்ல பயனையும், பகவான் கருணையையும் பெறுவார்கள்” என்று 1967-ல் குறிப்பிட்ட ராஜாஜி மிக எளிமையான தமிழில் - சிறுவர்கள், சிறுமிகள் கூட படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு - ராமாயணத்தை எழுதியுள்ளார். “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில் 3-3-1956ல் முதல் பதிப்பு வெளிவந்தது. தமிழகம் முழுதும், CRAZE என்று சொல்வார்களே அது போன்று புஸ்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. ஒன்பது பதிப்புகள் வந்தன (வானதி பதிப்பகம்). சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது. பல லக்ஷம் பிரதிகளுக்கு மேல் விற்ற இது, ராஜாஜியின் விருப்பத்தின் பேரில் பின்னர் தலைப்பு மாற்றப் பட்டு “ராமாயணம்” என்னும் புதிய தலைப்பில் ஜனவரி 1973ல் வெளிவந்தது. இதுவரை 33 பதிப்புகள் இந்த  தலை

ஆழ்வார்கள் பாடிய கோசலையின் குமரன்

டாக்டர் சுதா சேஷய்யனைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன் (படிக்க) . இவர் ஒரு MBBS, MS. மருத்துவ யுனிவர்சிட்டியில் ஒரு புரொஃபஸர். இவரது ராமாயண சொற்பொழிவுகளை நீங்கள் கேட்கவேண்டும். கம்பனை “கரைத்துக் குடித்தவர்” - கொட்டும் நீர்வீழ்ச்சி, தெளிந்த நீரோடை எனத் தமிழில் இவர் பேசத் தொடங்கினால், மெய்மறந்து, ஊண் மறந்து, உறக்கம் மறந்து நாள் முழுதும் ராமச்சந்திர மூர்த்தியை “நேரில்” தரிஸித்து, அனுபவிக்கலாம். அவ்வளவு இனிமை, சுவை. சுதா சேஷய்யன் நேற்று (4-4-2010) துவங்கி 9 நாட்களுக்கு ஸ்ரீ வரஸித்தி விநாயகர் கோயிலில், “ஆழ்வார்கள் பாடிய கோசலையின் குமரன்” என்ற தலைப்பில் ராமாயணத்தின் இன்னொரு கோணத்தைப் பற்றி பேசுவார். விஜயாவும் நானும் நேற்று மாலை 6-30க்கு சென்றோம். ரசித்துக் கேட்டோம். ராஜப்பா 10:30 மணி 5-4-2010