திருவல்லிக்கேணியில் குடி கொண்டுள்ள ஸ்ரீ பார்த்தஸாரதி பெருமாளை நேற்று மாலை விஜயாவும் நானும் சென்று தரிஸித்தோம். முன்னதாக 18-10-2009 அன்றும் (படிக்க ) , 2008 மே மாசமும் (படிக்க ) பெருமாளைத் தரிஸித்துள்ளோம். திருவல்லிக்கேணியும், பெரிய மீசை வைத்துள்ள கம்பீரமான அந்த பார்த்தஸாரதியும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நேற்றும் பெருமாளை மிக அருகில் நின்று நீண்ட நேரம் ஆசை தீர, திருப்தியாக தரிஸித்தோம். கூட்டம் இல்லை. வரதராஜப் பெருமாள், ஆண்டாள், யோக நரஸிம்ஹர் ஆகியோரையும் வணங்கி வழிபட்டோம். இந்தக் கோயிலுக்கு போனாலே மனசு நிம்மதியாகிறது; லேசாகிறது. TP KOIL தெரு வழியாக நடந்தோம். இங்குதான் மஹாகவியின் இல்லம் உள்ளது. இந்த நினைவு இல்லத்தின் எதிரில், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி கோயில் உள்ளது. ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ப்ருந்தாவனம் மந்த்ராலயத்தில் இருப்பது தெரிந்ததே. திருவல்லிக்கேணியில் இந்தக் கோயில் சமீபத்தில் மிக நேர்த்தியாக கட்டப்பட்டு உள்ளது. பார்க்க வேண்டிய ஒரு கோயில். திருவல்லிக்கேணியின் புகழ்பெற்ற தெருக்களையும், காய்கறி, பழக் கடைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டு தி-கேணி ஹைரோடில் சென்று ரத்ன