Skip to main content

Posts

Showing posts from February, 2012

Get-Together மீண்டும் சந்திப்பு

காஞ்சிபுரத்தில் தங்கள் பழைய ஸ்கூலில் 46 வருஷங்களுக்குப் பிறகு சென்ற 4 டிசம்பர் 2011-ல் சந்தித்த பிறகு, விஜயாவும் அவளது தோழிகளும் டெலிஃபோன் தொடர்பில் இருந்து கொண்டே இருந்தனர். மீண்டும் எல்லாரும் தங்கள் வீட்டில் சந்திக்கலாம் என ஸ்ரீமதி தேவசுந்தரி சொல்ல, அது போலவே சுமார் 20 பேர் அவரது தாம்பரம் வீட்டில் ஃபிப்ரவரி 2ஆம் தேதி [வியாழனன்று] சந்தித்தனர். விஜயா காலை 8-15க்கு கிளம்பி அடையாறு சென்று ஸ்ரீமதி சாந்தியுடன் காரில் சென்றாள். ஒவ்வொருவராக வந்து கலந்து கொண்டனர். மைசூரிலிருந்து ஒருவரும், மதுரையிலிருந்து ஒருவரும் இதற்காகவே சென்னை வந்தது குறிப்பிடத் தக்கது. காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 10 பேர் வந்தனர். தேவசுந்தரியும் அவரது தங்கை, தம்பியும் தடபுடலாக விருந்து சமைத்தனர். சப்பாத்தி, குருமா, புலவ், ராய்த்தா, தயிர் சாதம், ஐஸ்கிரீம் என இன்னும் பல ஐட்டங்கள் செய்தனர். எல்லாரும் பேசிக்கொண்டு சாப்பிட்ட பின்னர் சாயங்காலம் வீடு/ ஊர் திரும்பினர். ராஜப்பா 0930 3-2-2012

மயிலாப்பூரில் நாங்கள் 31-1-2012

நேற்று (31 ஜனவரி) எங்கள் [41-வது] திருமண ஆண்டு நாள். மாலை 4-15 க்கு வீட்டிலிருந்து கிளம்பி, மயிலாப்ப்பூர் மசூதி தெருவிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலு க்குச் சென்றோம். ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு சாத்திக் கொண்டு தரிஸனம் அளித்தார். அவரையும், ஸீதா சமேத ஸ்ரீ ராமரையும் சேவித்து விட்டு, ஸ்ரீ வேதாந்த தேஸிகர் கோயிலுக்கு நடந்தோம். ஸ்ரீ அலமேலு தாயார் ஸமேதராக ஸ்ரீநிவாஸப் பெருமாள் இங்கு எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் புன்னகை தவழும் முகத்தோடு மிகவும் அழகாக காட்சியளிக்கிறார்; அவரது அழகில் நம் மனசு கொள்ளை போய்விடுகிறது. மிக அருகில் நின்று பெருமாளை நீண்ட நேரம் சேவித்தோம். 250 வருஷங்களுக்கு முன்னால் முதலில் இங்கு வேதாந்த தேஸிகர் கோயில் மட்டும் தான் இருந்தது; பின்னர் சமீபத்தில் 1924-ல் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் நிறுவப்பட்டது. இங்குள்ள லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்ரீ வேதாந்த தேஸிகரின் “உபாஸன தெய்வம்”; மிக சக்தி வாய்ந்தவர். கோயிலில் சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ நரஸிம்ஹர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. அடுத்து, ஸ்ரீ ஆதிகேஸவ பெருமாள் கோயில். மிகவும் பழமையானது. 12 ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீ பேயாழ்வார் அவதரி