வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30-லிருந்து 6-45 வரை உபந்யாஸம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் 18-ஜனவரி-2007 வியாழனன்று பகவத்கீதை சொல்ல துவங்கினார். மொத்தம் 735 உபந்யாஸம் செய்தார்; இறுதியில், 06-நவம்பர்-2009 அன்று கீதை நிறைவு பெற்றது. 09-நவம்பர்-2009 அன்று ஸ்ரீமத் பாகவத புராணம் ஆரம்பித்தார். 12 ஸ்கந்தங்கள் கொண்ட ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீமன் நாராயணனின் 10-அவதாரங்களையும், மற்றும் பல பெருமைகளையும் விளக்குகிறது. முக்கியமாக கண்ணனின் அவதார பெருமைகளை சொல்லுகிறது (10-வது ஸ்கந்தம்). 621 பகுதிகளுக்குப் பிறகு, இன்று (30-03-2012, வெள்ளிக்கிழமை) ஸ்ரீமத் பாகவதமும் நிறைவுற்றது. 735 + 621 = 1326 நாட்கள். 5 வருஷங்களுக்கும் மேலாக (18-01-2007 முதல் 30-03-2012 வரை) இந்த உபன்யாஸங்களை நானும் விஜயாவும் ஒரு நாள் தவறாமல், தினமும் குளித்து, கேட்டு வருகிறோம். 18 ஜனவ்ரி 2008-ல் நான் எழுதியதை மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகிறேன்: “சென்ற 2007-ஆம் வருஷம் ஜனவரி முதல் வாரத்தில் என நினைக்கிறேன் - நானும், விஜயாவும் மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள்