லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் குற