ஜனவரி 12, 2014 ஞாயிற்றுக்கிழமை. எங்கள் வீட்டில் இன்று மாலை “வேத பாராயணம்” நடந்தது. எல்லாம் TSG மற்றும் கிருத்திகா ஏற்பாடு. எங்கள் இருவருக்கும் ஒரு வேலையும் இல்லை, ப்ங்கும் இல்லை. அஷோக், நீரஜா இருவரும் 11-ஆம் தேதி காலை இங்கு வந்தனர். ஞாயிறு அன்று கிருத்திகா மைசூர்பாகு, சக்கரை பொங்கல், இட்லி, சாம்பார், சட்னி, கிச்சடி ஆகியவற்றை செய்தாள். 6-30க்கு மேல் வேத பாராயணம் செய்வோர் வந்தனர். சங்கல்பம் முடிந்த கையோடு, 6-45க்கு பாராயணம் ஆரம்பித்தது. சாவித்திரி வந்தாள். 9 மணிக்கு அவர்கள் சாப்பிட்டனர். பின்னர் நாங்கள். அஷோக், நீரஜா 9-30க்கு பெங்களூர் புறப்பட்டனர். அர்விந்திற்கு எக்கச்சக்க செலவு ஆகியிருக்கும். ராஜப்பா 13-01-2014