ஒரு மொபைல் ஃபோனின் கதை.
நேற்று எங்கள் வீட்டில் ஒரு மொபைல் ஃபோன் "தொலைந்து" போய் விட்டது.. கைமறதியாக எங்கேயோ வைத்து விட்டொம் - எங்கு வைத்தோம் என்பது தெரியவில்லை.
ஃபோனில் சார்ஜ் இல்லாததால், ரிங் போட்டு இடத்தை கண்டு பிடிக்கவும் முடியவில்லை. கடைசியாக ஃபோன் யார் கையில் இருந்தது என்று யோசித்ததில், குழந்தை அதிதி வைத்திருந்தாள் என்பது ஞாபகம் வந்தது.
ஆரம்பித்தது வீட்டையே புரட்டிப் போட்டு தேடும் படலம். கட்டில்களின் கீழே, கதவுகளின் பின்னால், துணி மூட்டைக்குள் - என்று வீட்டின் எல்லா இடங்களையும் அலசினோம். ஆறு மாதங்களாக் தேடிக் கொண்டிருந்த பல பொருட்கள், அதிதியின் பல விளையாட்டு சாமான்கள், இன்னும் பலப்பல "எப்போதோ தொலைந்து போன" சாமான்கள் புதையலாக கிடைத்தனவே ஒழிய, போன் கிடைத்தபாடில்லை.
கறிகாய், பழம் வைக்கும் கூடை, ஃப்ரிஜ்ஜின் உள்ளே, மர பீரோ, ஸ்டீல் பீரோ, டேபிள் டிராயர்கள், சமையல் பாத்திரங்கள் - லிஸ்ட் நீண்டு கொண்டு போனதே தவிர, போன் ??
அதிதியின் விளையாட்டு சாமான்கள், பொம்மைகள் இன்ன பிற சாமான்களை வைப்பதற்கு எங்கள் வீட்டில் நாலு அட்டைப்பெட்டிகள், கூடைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ரொம்பி வழியும். விடவில்லை. தேடினோம்.
மூன்றாவது பெட்டியின் அடியில் ----- அப்பாடா, ஃபோன் கிடைத்தது. ஒரு வழியாக.
ஃபோனை அதிதியிடம் காண்பித்தால், குழந்தை 1000-வாட் புன்னகை புரிகிறாள் !!!
ராஜப்பா
காலை 1150, 8 ஆகஸ்ட்

Comments