அஷோக் புது வீடு கிருஹப் பிரவேசம்
அஷோக் மற்றும் நீரஜா இருவரும் நாலு, ஐந்து மாசங்களாகவே அலுக்காமல் சலிக்காமல் புது வீட்டிற்கென ஓடி ஓடி வேலை செய்தனர். கடைசி 7 நாட்களில் தினம் தினம் 5,6 முறையாவது புது வீட்டிற்குச் சென்று வேலை பண்ணினார்கள். அவர்களது அயராத உழைப்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி கண்கூடாகத் தெரிந்தது.
30 ஆம் தேதி ஏழு எட்டு தடவையாவது அஷோக் தன்னுடைய புது வீட்டிற்குச் சென்று GAS போன்ற சாமான்களை வைத்து விட்டு வந்தான். அஷோக், நீரஜா இருவரது முகங்களிலும் ஒருவித TENSION காணப்பட்டது.
ஸ்ரீவித்யா, பசுபதி, ஆனந்த், ஜனனி, ராம்சுந்தர், ரமணா ஆகியோர் விழாவிற்கு வந்து கலந்து கொண்டனர். நீரஜா பக்கத்திலிருந்து, அவளது அப்பா, அம்மா தவிர, அவளது சித்தி, சித்தப்பா, கிரி மாமா, மாமி, ஜயஸ்ரீ மாமி, மாலா சித்தி ஆகியோர் வந்தனர். ப்ரசன்னா டில்லியில் இருந்ததால் அவனால் வர முடியவில்லை.
காலை 8 மணிக்கு கேசரி, இட்லி, பொங்கல், வடை சிற்றுண்டி - சுமார் 50 பேர் சாப்பிட்டோம். பகல் 12 மணியளவில் விருந்து சாப்பாடு. 40-45 பேர் சாப்பிட்டோம். பின்னர் ஒவ்வொருவராக வீடு திரும்ப ஆரம்பித்தனர். சாவித்திரியுடன் சுகவனம் கிரிஜா இருவரும் ஹோசூர் சென்றனர். வீட்டை கூடியவரையில் ஒழித்துக்கொண்டு எல்லாரும் 5 மணிக்குள் BTM வீட்டிற்கு வந்தோம்.
அன்றிரவு ரயிலில் அருண், காயத்ரி, ஸௌம்யா, GBS, மாமி ஆகியோர் சென்னை புறப்பட்டனர். அஷோக் நீரஜா இருவரும் புது வீட்டிற்கு போய் படுத்துக்கொண்டனர்.
இவ்வாறாக, கிருஹப்பிரவேசம் மிக மிக நல்லமுறையில், ஒருவிதமான குறைபாடுகளும் இல்லாமல் நடந்தது. அஷோக் நீரஜா முகங்களில் மீண்டும் சிரிப்பு பூத்தது. அவர்கள் உழைத்த உழைப்பிற்கு மிக பிரமாதமாக நடந்தேறியது.
கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்.
ராஜப்பா
இரவு 9 மணி, 7-9-2007
பின்குறிப்பு:: அர்விந்த், கிருத்திகா, அதிதி செப் 2ஆம் தேதியன்றும், நானும் விஜயாவும் செப் 6ஆம் தேதியன்றும் சென்னை புறப்பட்டோம்.
Ashok, Gruha Pravesam
அஷோக் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு கிருஹப் பிரவேசம் செய்தான். 80% முடிந்த நிலையில், 2007 ஆகஸ்ட் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்தது.
நானும் விஜயாவும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு பெங்களூர் போனோம். அருண், அர்விந்த் ஆகியோர் 30ஆம் தேதி விடியற்காலை வந்தனர். காயத்ரியின் அப்பா, அம்மாவும் வந்தனர். அன்று காலை 11 மணிக்கு சாவித்திரி ஹோசூரிலிருந்து வந்தாள். இரவு சுகவனமும் கிரிஜாவும் வந்தனர். எல்லாருக்கும் சாப்பாடு "ஐயங்கார்” கடையிலிருந்து தருவித்தோம்.அஷோக் மற்றும் நீரஜா இருவரும் நாலு, ஐந்து மாசங்களாகவே அலுக்காமல் சலிக்காமல் புது வீட்டிற்கென ஓடி ஓடி வேலை செய்தனர். கடைசி 7 நாட்களில் தினம் தினம் 5,6 முறையாவது புது வீட்டிற்குச் சென்று வேலை பண்ணினார்கள். அவர்களது அயராத உழைப்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி கண்கூடாகத் தெரிந்தது.
30 ஆம் தேதி ஏழு எட்டு தடவையாவது அஷோக் தன்னுடைய புது வீட்டிற்குச் சென்று GAS போன்ற சாமான்களை வைத்து விட்டு வந்தான். அஷோக், நீரஜா இருவரது முகங்களிலும் ஒருவித TENSION காணப்பட்டது.
31 ஆம் தேதியும் விடிந்தது - காலை 2-30க்கே எழுந்து நாங்கள் 4 பேரும் குளித்தோம். 4 மணிக்குள் எல்லாரும் குளித்து, ரெடியாகி விட்டோம். மூன்று குழுக்களாக 5-30க்குள் புது வீடு போய்விட்டோம். முதலில் கோ-பூஜை நடந்தது. பசுவிற்கும் அதன் கன்றுக்கும் அஷோக் - நீரஜா பூஜை
செய்தனர். பின்னர் நாங்கள் நாலு பேரும் ஆளுக்கொரு ஸ்வாமி படங்களை எடுத்துக்கொண்டு நாலு மாடி ஏறி புதுவீடு புகுந்தோம்.
கணபதி ஹோமம், நவக்ரக ஹோமம் ஆகியவை சிறப்பாக நடந்தேறின.ஸ்ரீவித்யா, பசுபதி, ஆனந்த், ஜனனி, ராம்சுந்தர், ரமணா ஆகியோர் விழாவிற்கு வந்து கலந்து கொண்டனர். நீரஜா பக்கத்திலிருந்து, அவளது அப்பா, அம்மா தவிர, அவளது சித்தி, சித்தப்பா, கிரி மாமா, மாமி, ஜயஸ்ரீ மாமி, மாலா சித்தி ஆகியோர் வந்தனர். ப்ரசன்னா டில்லியில் இருந்ததால் அவனால் வர முடியவில்லை.

Comments