"கண்டேன் ஸீதையை"
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் ஸுந்தர காண்டம் பிரசித்தி பெற்றது. ஸ்ரீராமபிரானிடத்து மெய்யடிமையும், உண்மைப் பக்தியும் வாய்க்கப் பெற்றுள்ள ஹநுமானின் வீரச்செயல்கள் இக்காண்டத்துள் மிக விரித்துக் கூறப்பட்டுள்ளன்.
மொத்தம் 68 ஸர்க்கங்கள் கொண்டது. ஹநுமான் சமுத்திரத்தைத் தாண்டி லங்கைக்கு போனதிலிருந்து ஆரம்பிக்கிறது. மஹேந்திர பர்வதத்திலிருந்து கிளம்பி, மைநாக பர்வதத்தை தாண்டி, அரக்கி ஸூரஸையின் வாயில் நுழைந்து புறப்பட்டது, அரக்கி ஸிம்ஹிகையை அழித்து லங்கை சென்றது - அங்கு ஸீதையைத் தேடியது, அசோக வனத்திற்கு சென்றது, அங்கு ஹநுமான் ஸீதையைக் கண்டது, ஸீதையின் கஷ்டத்தைப் பார்த்து துக்கம் கொண்டது,
பின்பு ஹநுமான் ஸ்ரீராம காவியத்தை ஆரம்பத்திலிருந்து பாடியது, ஸ்ரீராமனுடைய கணையாழியை ஸீதையிடம் அளித்தது, ஸீதை தன்னுடைய சூடாமணியை ஸ்ரீராமருக்குக் கொடுத்தது, ஆஞ்சநேயர் அசோக வனத்தை அழித்தது, நிறைய அரக்கர்களை அழித்துக் கொன்றது, ராவணன் சபைக்குச் சென்று அவனுக்கு உபதேசம் செய்தது, ஆஞ்சநேயரின் வாலில் அரக்கர்கள் தீ வைத்தது, அந்த தீயினிலாயே லங்கையை அழித்தது, பின்னர் ராமனிடம் திரும்பி வந்து "கண்டேன் ஸீதையை" என சூடாமணியைக் கொடுத்து அறிவித்தது --- என ஸுந்தர காண்டம் முடிவுறுகிறது.
இந்த ஸுந்தர காண்டத்தை, த்யாகராஜர் பாடல்கள் மூலமும், வால்மீகி ஸ்லோகங்கள் மற்றும் கம்பர் பாடல்கள் மூலமாகவும் மிக இனிமையாகப் பாடி ஸ்ரீமதி விஷாகா ஹரி (Smt Vishakha Hari) அவர்கள் நம்மை வேறு ஒரு உலகிற்கே அழைத்து சென்று விடுகிறார். காட்சிகள் அப்படியே நம் கண் முன்னால் வருகின்றன. கதையுடன் ஒன்றிப் போய், நாமும் சமுத்திரத்தை தாண்டுகிறோம், அசோக வனத்திற்க்கு போகிறோம், அங்கு ஸீதம்மாவை தரிசிக்கிறோம், ஸீதம்மாவுடன் நாமும் பேசுகிறோம் - என்ன ஒரு தெய்வீக உணர்வு ! ஸ்ரீமதி விஷாகா ஹரி நம்மை அங்கேயே கூட்டிச் செல்கிறார்.
மிக அற்புதமான உபன்யாசம். DVD 3 மணி நேரத்திற்கும் மேலாக ஓடுகிறது. டிவிடியின் விலை ரூ 99 மட்டுமே. உபன்யாசத்தைக் கேட்டு தெய்வீக அனுபவத்துடன் ஸீதம்மாவின் அருளையும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளையும் பெற்று ஆனந்தப்படுங்கள்.
ஸுந்தர காண்டம், மற்றும் ஸீதா கல்யாணம், இரண்டு டிவிடிக்களையும் கிரி டிரேடிங் (Giri Trading) கடையில் ஜன 5-ஆம் தேதி வாங்கினோம்; ஹனுமத் ஜயந்திக்கு அடுத்த நாள் (ஜன 9) பார்த்தோம். ஸீதா கல்யாணம் உபன்யாசத்தைப் பற்றி முன்பே எழுதி விட்டேன். (படிக்கவும்)
ராஜப்பா
பகல் 3 மணி, 12 ஜனவரி 2008

Comments