இன்று (4-3-2010) நான் Maiya's என்ற உணவகத்தைப் பற்றி எழுதப் போகிறேன்.
இது பெங்களூரில், ஜயநகர் 4th Blockல் பஸ் ஸ்டாண்ட் அருகில், கணேஷ் கோயிலுக்கு எதிரில் உள்ள 5-மாடி உணவகம். பெங்களூரின் “உணவு ஆலயமான” MTR Restaurant-ஐ சேர்ந்தது. ஏப்ரல் 2009-ல் இது BTM Layout-லிருந்து இங்கு மாற்றப்பட்டது. புகழ்பெற்ற MTR-ன் “வாரிசு” என்பதால், பெங்களூர் வாசிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பு.
விஜயா, நீரஜா, நீரஜாவின் அம்மா, அப்பா, அஷோக், மற்றும் நான் ஆறு பேர் நேற்றிரவு (மார்ச் 3) இங்கு உணவு உட்கொள்ள சென்றோம். ஒருவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கொஞ்சம் அசிரத்தையாகவே நான் நுழைந்தேன்.
2-வது மாடியில் உணவுக் கூடம். நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும், அங்கு அமைதி நிலவியது. முதல் ப்ளஸ் பாயிண்ட். பணிவுடனும், புன்சிரிப்போடும் எங்களை கூட்டிப் போய் உட்கார வைத்தார்கள். ப்ளஸ் பாயிண்ட் 2. கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போகாத குறைதான் !!
தட்டு வந்ததும் வராததுமாக, ஒரு வெள்ளி டம்ளரில் (ஆமாம், வெள்ளி டம்ளர்!) தேன் கலந்த appetizer கொடுத்தார்கள். (இது MTR வழக்கமாம்). மிக ருசியாக இருந்தது. பின்னர் அருமையான non-artificial சூப்.
வீட்டில் கூட நாம் பண்ண மறந்து விட்ட பயத்தம்பருப்பு கோசுமல்லி பழைய நினைவுகளை தூண்டியது. ஒரு கூட்டு (chow-chow), ஒரு குருமா, ஒரு உருளைக்கிழங்கு பொரியல் பரிமாறினார்கள்; எல்லாமே authentic north kanara கன்னட சமையலின் அருமை, அதிலும் அந்த உருளைக்கிழங்கு !! ஓ !!
MTR-ன் விசேஷமான சுடச்சுட பூரிகள் வந்தன.பூரியும் உருளைக்கிழங்கும் - விரல்களை நக்க வைக்கும் ருசி. தட்டு காலியாக, காலியாக பூரிகளும், உருளையும் வந்து கொண்டே இருந்தன. எங்கு நின்றிருந்தார்கள் பரிமாறுபவர்கள்? Mind Blowing Service. கோசுமல்லியை நான் மூன்று முறை கேட்டு, சாப்பிட்டேன்.
அடுத்து வந்தது புலவ். Homemade மசாலா சாமான்கள், அதுவும் மிதமாக, போட்டு செய்தது. கூடவே வெள்ளரி போட்ட கெட்டித் தயிர் பச்சடி (Raitha). கப் கப்பாக குடிக்க வேண்டும் போல ஒரு சின்ன ஆசை! அட்க்கிக் கொண்டேன்.
ஸ்வீட்? ஜிலேபி (ஜாங்கிரி அல்ல) வந்தது. கூடவே “வீட்டில் செய்த” உருளை வறுவல், ஊறுகாய், பஜ்ஜி. அப்போதுதான் வெங்கலப் பானையிலிருந்து வடித்த வெள்ளை வெளேர் சாதம் கொண்டுவந்து பரிமாறினார்கள்.
ஏதோ இரண்டு பண்டங்களை பரிமாற வந்தார்கள். நானும், விஜயாவும் “வேண்டாம், வேண்டாம்,” என மறுதளித்தோம். ஆனால் அவ்ர்கள் விடவில்லை; நெருங்கிய சொந்தக்காரர் போல, “கொஞ்சமாக சாப்பிட்டுப் பாருங்கள், ஸார், நன்றாக இருக்கும்” என வற்புறுத்தி அவைகளை பரிமாறினார்கள். என்ன உபசரிப்பு ! அவை --
மோர்க்குழம்பு ஊற்றினார்கள். குடைமிளகாய் போட்டு காரமும் இனிப்புமாக gravy-like போல் ஒன்றும் ஊற்றினார்கள். கொஞ்சம் நாக்கில் தொட்டு சுவைத்தவுடன், மோர்க்குழம்பை நிறையவே ஊற்றி சாப்பிட்டேன். கன்னட நாட்டிற்கே உரித்தான தனி மணம், சுவை.
பப்படம் சூடாக வந்தது.பின்னர் சாம்பார், ரசம். சாம்பார் சாதத்தின் மேல் இரண்டு ஸ்பூன் நெய். பரிமாறுபவர்கள் எங்கிருந்துதான் பார்த்துக் கொண்டிருந்தார்களோ தெரியவில்லை, ஆனால் தட்டில் ஏதாவது ஒரு ஐட்டம் குறைந்தாலும், உடனே ஓடி வந்து பரிமாறி விடுகிறார்கள். எல்லாமே Unlimited !
அடுத்து, பால் பாயஸம் - நான் சாப்பிடாவிட்டாலும் இது மிக ருசியாக இருந்தது என மற்றவர்கள் சொன்னார்கள். கெட்டித் தயிர் வைத்தார்கள், நிஜமாலுமே கெட்டித்தயிர்!
ஒரு அருமையான கல்யாண விருந்து சாப்பாட்டை சாப்பிட்ட திருப்தியில், கை அலம்பிக் கொண்டு வந்தால், ஐஸ்க்ரீம்+Fruit salad காத்துக் கொண்டிருந்தது. கடைசியாக பீடா.
திருப்தியான, நல்ல சாப்பாடு. ரூ. 130.00 தான். அடுத்த முறை பெங்களூர் போனால், ஜயநகர் 4th Block செல்லுங்கள். Maiya's Highly Recommended.
கீழே தரை தளத்தில் பெரிய்...ய ஒரு இனிப்பகம். காரங்களும், இனிப்புகளும் நிரம்பி வழிகின்றன; வாங்கும் கூட்டமும்தான். 5-வது மாடியில் வட இந்திய உணவு வகைகள் கிடைக்கின்றன; 25-02-2010 முதல் GUJARATI SPECIAL THALI (130.00) பரிமாறுகிறார்கள். அடுத்த முறை இதை சாப்பிட்டு பார்க்க வேண்டும்.
Rajappa
2.00 PM
4 March 2010

Comments
Your blog is informative, useful and moreover trustworthy.
Ganesh
Morecozhambu , Payasam ,Pachadi & Pappadam
1. Menu
2. Style of writing
Felt like i was in the restaurant with u (amma read the post for me!!!)
Srikanth/Jayashree
Jollu vidaren. Wonderful informatic and enjoyable posting. Many can not express the feeling and not even understand the best thing available in front of us but your writing brought out the inner feeling.
More over, the comment from "Bangalore" -- TRUSTWORTH -- is the biggest achievement you did. It is not easy that others to trust someone else, you did it.
I am so happy to see this comment more than the post.
Vasu