ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தின் 7-வது ஸ்கந்தத்தை நேற்று (28-12-2010) நிறைவு செய்தார். 7-வது ஸ்கந்தம் சென்ற நவம்பர் மாதம் 18-ஆம் தேதியன்று ஆரம்பித்தது.
இன்று காலை (29-12-2010) 8-வது ஸ்கந்தத்தை ஆரம்பித்தார். 8-வது ஸ்கந்தத்தில், நான்கு கதைகள் சொல்லப்படுகின்றன. அதைத் தவிர மனுக்களின் வம்ஸாவழிகளும் சொல்லப்படுகின்றன.
1. கஜேந்திர மோக்ஷம்: முதல் மனு ஸ்வாயம்புவர்; பின்னர், 2-வது, 3-வது மனுக்களுக்கு பிறகு, 4-வது மனுவாக தாமஸர் என்பவர் இருந்தார். இவரது காலத்தில்தான், ஸ்ரீமன் நாராயணன் ஹரியாக உருவெடுத்து, முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்ட கஜேந்திரன் என்கிற யானை ஆதிமூலமே என ஹரியை அழைக்க, கருடன் மீதேறி ஓடோடி வந்து தன் பக்தனை (யானையை) காப்பாற்றினார்.
2. அமுதம் கடைந்தது: 6-வது மனுவின் (சாக்ஷூஷர்) காலத்தில் இது நிகழ்ந்தது. மந்திர மலையை மத்தாக நாட்டி, வாஸூகி என்கிற பாம்பை கயிறாகச் சுற்றி, பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தார். மந்திர மலை கடலில் அமிழ்ந்து விடாமல் இருக்க, தானே கூர்மாவதாரம் எடுத்து, மலையை கீழிருந்து தாங்கினார்.
கடலிலிருந்து காலகட்ட விஷம், ஐராவதம் என்கிற யானை, உச்சைச்ரவஸ் என்கிற குதிரை, ஸ்ரீ மஹாலக்ஷ்மி எனப் பலர் தோன்றினர்.
3. வாமனன் அவதாரம் - த்ரிவிக்ரமன்: ப்ரஹ்லாதனுடைய பேரன் பலிச் சக்கரவர்த்தி. யாகங்கள் நிறைய செய்து, இவர் இந்திரனுடைய மூன்று லோகங்களான பூ: புவ: ஸூவ: பறித்துக் கொண்டார்.
திருமால் அதிதிக்கும் காஸ்யபருக்கும் மகனாகப் அவதரித்து, வாமன (குள்ள) வடிவத்தோடு மஹாபலியின் முன் போய் மூன்று அடி நிலம் யாசித்தார். (இதை தடுக்க எண்ணிய சுக்ராச்சாரியாரின் கண்களை தர்ப்பையால் குத்தினார்; பின்னர் சுக்ராச்சாரியார் சிவனை வேண்டி தன் கண் பார்வையை பெற்றது தனிக் கதை)
பலிச் சக்கரவர்த்தி வாமனனின் விருப்பத்தை நிறைவேற்ற, திடீரென வாமனன் நெடிது வளர்ந்து த்ரிவிக்ரமனாக உருவெடுத்து, வலது அடியால் கீழ்லோகத்தையும், இடது அடியால் மேல் லோகத்தையும் அளந்து விட்டு, 3-வது அடிக்கு நிலம் கேட்டார். பலியின் தலையை அழுத்தி, கீழ்லோகத்தில் அடைத்து, இந்திரனின் மூன்று லோகங்களையும் மீட்டார்.
4. மத்ஸ்யாவதாரம் (மீன்): ப்ரளயம் ஏற்பட்ட போது, மத்ஸ்யாவதாரம் எடுத்து, வேதங்களையும், பூ: புவ: ஸூவ: ஆகிய லோகங்களையும், ஸப்தரிஷிகளையும் காப்பாற்றினார். மத்ஸ்ய புராணத்தையும் உபதேசித்தார்.
இனி வரும் நாட்களில் இந்த 8-வது ஸ்கந்தத்தைக் கேட்டு அனுபவிப்போம். ஸ்ரீமன் நாராயணனின் அனுக்ரகத்தைப் பெறுவோம்.
ராஜப்பா
29-12-2010
11:30 காலை

Comments