கவரப்பட்டு என்னும் கிராமம் சிதம்பரத்திலிருந்து சுமார் 6-7 கிமீ தூரத்தில் உள்ளது. இதுதான் எங்கள் “சொந்த ஊர்” எங்கள் அப்பாவின் இனிஷியலான G என்பது இந்த கிராமத்தைத்தான் குறிக்கிறது. இங்கு எங்கள் தாத்தா (ராமசேஷ ஐயர்) வசித்து வந்தார். (அவர் காலமானதும் இங்குதான்) அவருக்கு முன்பு அவரது தந்தை - எங்கள் கொள்ளுத்தாத்தா ஸ்ரீமான் நடராஜ ஐயரும் இந்த கிராமத்தில் தான் வசித்திருக்க வேண்டும்.
எங்கள் தாத்தா ஸ்ரீமான் ராமசேஷ ஐயர்
எங்கள் தாத்தா ஒரு ராமர் உருவப்படத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்தப் படத்தை அவர் பின்னால் ஊருக்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டார். ஸ்ரீ ராம நவமியின் போது இந்தப் படத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். முதலில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் வீடுகளில் நடைபெற்று வந்தது; பின்னர், கிராமத்து பக்தகோடிகள் பணம் திரட்டி ஒரு கட்டிடத்தை கட்டி அதில் ஸ்ரீராமரை வைத்து ராமநவமியை கொண்டாட ஆரம்பித்தனர்.
ராமர் மடம், கவரப்பட்டு
150 வருஷங்களாக இந்த ஸ்ரீராம நவமி உத்ஸவம் கவரப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு (2011) 151-வது உத்ஸவம். ஜனனோத்ஸவமாக ஸ்ரீராம நவமி திதி தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. இந்த வருஷம் 2011 ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கியது. உத்ஸவத்தின் கடைசி நாளன்று ஸீதா கல்யாணம் நடைபெறும்.
அக்ரஹாரம், ராமர் மடம்
உத்ஸவத்திற்கு இந்த ஆண்டுதான் நானும் விஜயாவும் கவரப்பட்டு சென்றோம். பல வருஷங்களாகவே இந்த ஆசை நிறைவேறாமல், ஸ்ரீராமரின் அருளினால் இந்த ஆண்டு நிறைவேறியது. சரோஜா (அக்கா) - அத்திம்பேரும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.
20-04-2011, புதன்கிழமை :: காலை 6-45க்கு பஸ் (23C) ஏறி, எக்மோர் சென்று 8-20க்கு ரயிலில் சிதம்பரம் புறப்பட்டோம். இட்லி, தோசை கையில் எடுத்துச் சென்றோம். கடலூர் ரயில் பாதை அகல பாதையான பிறகு இதுவே எங்கள் முதல் பயணம்.
சிதம்பரத்திற்கு பகல் 1 மணிக்கு சென்றடைந்தோம். நல்ல மழை. சொட்ட சொட்ட நனைந்தோம். அங்கு ஹோட்டலில் தங்குவதாக பிளான், ஆனால் தங்கவில்லை (ரூ 2300.00 per day). சாப்பிட்டு விட்டு ஆட்டோ பிடித்து கவரப்பட்டு சென்றோம்.
ஸ்ரீராமர் மடத்திற்கு அடுத்த வீடுதான் எங்கள் சித்தப்பா நாராயணஸ்வாமி ஐயர் வசித்த வீடு; தற்போது அங்கு சித்தப்பாவின் மகன் ஸ்ரீ சுந்தரராமன் அண்ணா - ஸீதாலக்ஷ்மி மன்னி வசிக்கின்றனர். இருவருக்கும் வயது 75க்கும் மேல் இருக்கும். ஒரே பையன் - பாஸ்கர் - நெய்வேலியில் வேலையில் இருக்கிறான்; ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.
எங்கள் சித்தப்பா ஸ்ரீமான் நாராயணஸ்வாமி ஐயர்
ஸ்ரீமான் சுந்தரம் அண்ணா - அவரது மகன் பாஸ்கர்
சுந்தரம் அண்ணா - மன்னி வீடு (சரோஜாவின் அருகில் மன்னி)
ராஜம் அக்கா, விஜயா, சரோஜா,அத்திம்பேர் - வீட்டிற்கு முன்னால்
ஸ்ரீராமர் உருவப் படம்
அன்று இரவு 8 மணிக்கு மடத்தில் சாப்பாடு போட்டனர். 10 நாட்களாகவே அக்ரஹாரத்தில் உள்ள எல்லாருக்கும் தினமும் பகல் மற்றும் இரவு உணவு மடத்தில் சமையல்காரர்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இரவு 10-30 க்கு பஜனை ஆரம்பித்தது, விடிய விடிய நடந்தது. பாட்டும், பஜனையும், நடனமும் - ஒரே கோலாகலம்தான். 4-30க்கு முடிந்தது.
21-04-2011, வியாழக்கிழமை :: காலை உஞ்சவிருத்தி. 7-30க்கு ஆரம்பிப்பதாக இருந்த இது 8-45க்கு ஆரம்பித்தது. அக்ரஹாரத்தின் இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை சென்று வீடு வீடாக உஞ்சவிருத்தி செய்தார். எல்லா வீட்டிலும் அவர்களுக்கு கால் அலம்பி பாத பூஜை செய்து, அரிசி, தேங்காய், பழம் அளித்தனர்.
காலை 10-30க்கு ஸீதா கல்யாணம் தொடங்கியது. க்ரோம்பேட்டை ஸ்ரீ கோபாலசுந்தரம் என்பவர் பாகவதர். நன்றாக, கணீரென்று பாடி பஜனைகள் செய்தார். முதலில் உஞ்சவிருத்தி மூலம் வந்த அரிசியை உரலில் கொட்டி உலக்கையினால் “முத்து” குத்தினர். ஒரே நடனம்தான். பார்க்க அழகாக இருந்தது. ஆழ்ந்த தத்துவம் உள்ளதாம். மாமிகளும் மாமாக்களும் முத்து குத்திய பிறகு, ஸீதா கல்யாணம் ஆரம்பித்தது. பாகவதர் நன்கு செய்தார்.
பின்னர் தம்பதி பூஜை. சுந்தரம் அண்ணா - மன்னிக்கு தம்பதி பூஜை செய்தனர். எல்லாம் முடிந்து, சாப்பிட ஆரம்பிக்கும்போது மணி 3-15.
உஞ்சவிருத்தி
பாகவதர் ஸ்ரீமான் கோபாலசுந்தரம்
மாமிகள் முத்து குத்துகின்றனர்
பின்னர் தம்பதி பூஜை. சுந்தரம் அண்ணா - மன்னிக்கு தம்பதி பூஜை செய்தனர். எல்லாம் முடிந்து, சாப்பிட ஆரம்பிக்கும்போது மணி 3-15.
சுந்தரம் அண்ணா - மன்னிக்கு தம்பதி பூஜை நடக்கிறது
சாப்பிட்டபிறகு வசப்புத்தூர் என்ற கிராமத்திற்கு சென்றோம். எங்கள் சித்தப்பா இங்கு வேலை பார்த்தார். இங்கு ஒரு மிகப் புராதனமான காசி விஸ்வநாதர்-விசாலாக்ஷி அம்மன் கோயில் இருந்ததாம்; தற்போது க்ஷீணித்த நிலையில் கவனிப்பாரின்றி கிடக்கிறது. கவரப்பட்டில் உள்ள ஒரு பக்தர் இதை புனருத்தாரணம் பண்ண வேண்டும் என்று முடிவுசெய்து, நன்கொடைகள் பெற்று, கோயிலை புதுப்பிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
விஸ்வநாதர் கோயில் பணிகள்
சிதம்பரம் நடராஜரை தரிசித்து விட்டு வீடு திரும்பினோம். இரவு ஸ்வாமி வீதி உலா நடைபெற்ற போது மணி 12ஐ தாண்டிவிட்டது. 2-30 முதல் 4-15 வரை மீண்டும் பஜனைகள்.
ஸ்ரீராமர் வீதி உலா
22-04-2011 வெள்ளிக்கிழமை :: காலை ஸ்ரீ ஆஞ்சநேயர் உத்ஸவம். பார்த்து விட்டு, 10-15க்கு சிதம்பரம் கிளம்பி, 12 மணி ரயில் ஏறி, மாலை 6-15க்கு சென்னை எக்மோர் வந்து சேர்ந்தோம்.
இவ்வாறாக எங்கள் கவரப்பட்டு பயணம் இனிதாக, திருப்தியாக, மகிழ்ச்சியாக முடிந்தது. அப்பா - தாத்தா - கொள்ளுத் தாத்தா ஊர் பார்த்தது சந்தோஷமாக இருக்கிறது. அதுவும், தாத்தாவின் கோயில், தாத்தாவின் ராமர் உருவப் படம் பார்த்தது மனசுக்கு நிறைவாக இருக்கிறது.
எல்லாம் ஸ்ரீராமபிரான் - ஸீதம்மா அருள்.
ராஜப்பா11:20 AM
24-04-2011
Comments
In your post titled "Kavarapattu gramam Seetha Kalyanam", you have mentioned that your Chiththappa worked in Vasaputhur village.
My father's native is Vasaputhur. If you can tell your chiththappa's name and his designation, I will checkup with my father whether he knew him. My grandfather was the Munsif of Vasaputhur village long back, before they settled in Chennai.
Also, my father told that he knows about the annual Seetha kalyanam taking place in your village and someone known to him used to participate in it actively.
Mahesh
That's interesting. I have given many names (like my chiththappa's, grandfather, great-grandfather etc) in my blog itself.
My thatha's name is GN RAMASESHA IYER, but i am not aware where he was employed - but i believe he worked in the Dist Collector Office at Cuddalore. My father is GR Subramania Iyer, Postmaster at Cuddalore. He is no more.
My Chiththapa is GR NARAYANASWAMY Iyer, who was the Village Karnam at Vasapuththur village. His son is Mr GN SUNDARARAMAN (now about 75 years) who lived in Vasaputhur since his birth. I have given his photo and his son's photo in the Blog. He lives now at Gavarapattu.
Please convey this to your father for his info. Who is that "someone used to participate" in Seetha Kalyanam ?
My gmail ID is rajappa41@gmail.com and i request you to write to me with full details.
I am 70 now and presently settled at Kalakshetra Avenue, THIRUVANMIYUR. Pl mail me with details.
15-03-2012
12:30 Noon
N.D. Nataraja Deekshidhar http://natarajadeekshidhar.blogspot.in