கிருத்திகாவின் பெற்றோர் (Mrs and Mr. TS கணபதி சுப்ரமணியம்) தங்களுடைய புது இல்லத்தின் கிருஹப் ப்ரவேஸத்தை நேற்று, வெள்ளிக்கிழமை, 06 மே 2011 அன்று நடத்தினார்கள். இவர்களது வீடும் அர்விந்த்-கிருத்திகாவின் புது வீடும் ஒரே கட்டிடத்தில் 2ஆம் மாடியில், முதல் மாடியில் உள்ளன.
காலை 8-30க்கு கோ-பூஜையுடன் விழா துவங்கியது. பின்னர் கிருஹப் ப்ரவேஸம். அடுத்து பால் காய்ச்சி குடித்தல்.
பின்னர் ஹோமம்.சுமார் 11-30க்கு விழா முடிவுற்றது. மிகக் குறைந்த பேர்களையே அவர் அழைத்திருந்தார். மொத்தமே 20-ஐ தாண்டவில்லை. காயத்ரி, குழந்தைகள் துறையூர் சென்றுள்ளனர்; அருண் மட்டும் வருவதாக இருந்தான்; கடைசி நேரத்தில் அவனால் வர இயலவில்லை.
அதிதி தன் புது பட்டுப் பாவாடையில் ஜொலித்தாள். அவளுக்கு மிகவும் சந்தோஷம், பெருமை. பாவாடை சலசலக்க இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருந்தாள்.
சாப்பாட்டிற்குப் பின்னர், வீட்டை ”ஒழித்து விட்டு” நாங்கள் 3 மணிக்கு பெஸண்ட்நகர் திரும்பினோம். விழா வைதீக காரியங்களில் நன்கு நடந்தது; ஆனால், காடரர் ஸ்ரீனிவாஸன் காலை வாரிவிட்டார்; காஃபியோ, மதியம் சாப்பாடோ சரியான சமயத்தில் வரவில்லை. அர்விந்த் போய் சாப்பாட்டை எடுத்து வர வேண்டியிருந்தது. பரிமாற பாத்திரங்களோ, உதவிக்கு ஆட்களோ இல்லவே இல்லை. விஜயாவும், கிருத்திகாவும், அர்விந்தும் தான் முழுக்க முழுக்க பரிமாறினார்கள். ஸ்ரீனிவாஸனுக்கு இது ஒரு சவாலாக அமைய வேண்டும்.
ராஜப்பா
11:15 மணி
07-05-2011

Comments