10வது ஸ்கந்தம் - பகுதி 3
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. இந்த ஸ்கந்தம் மிக நீளமானதால் (மொத்தம் 90 அத்தியாயங்கள் உள்ளன) இதை நான் மூன்று பகுதியாக பிரித்து எழுதுகிறேன். இது 3-வது பகுதி.
ஜராசந்தன் வதம் : ஸ்ரீகிருஷ்ணன் இந்திரப்ப்ரஸ்தம் சென்று பாண்டவர்களுடன் இருந்தார். ஜராசந்தனை அழிக்க பீமனை கருவியாக்கிக் கொண்டு, பீமன் மூலம் ஜராசந்தனை அழித்தார். (10:72)
பாண்டவர்கள் (தர்மபுத்திரர்) செய்த ராஜஸுய யாகத்தில் முதல் நமஸ்காரம் ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தான் செய்ய வேண்டும் என பாண்டவர்கள் விரும்பினார்கள்; ஆனால், சிசுபாலன் இதை எதிர்த்தான்.(10:73)
ராஜஸுய யாகம் இங்கு நன்கு விளக்கி சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் அரண்மனையில் புகுந்த துரியோதனன் தண்ணீர் இல்லாத இடத்தில் தண்ணீர் இருப்பதாக நினைத்து நடந்ததையும், தண்ணீர் இருந்த இடத்தில் இல்லையென்று எண்ணி, வழுக்கி விழுந்ததையும் பார்த்து பீமன், திரௌபதி முதலானோர் அவனை பார்த்து சிரித்தனர். (10:75)
சால்வா என்ற அசுரனை முடித்தது (10:76 10:77) சால்வனின் தோழனான தண்டவக்ரா என்னும் அசுரனையும், இந்த அசுரனின் தம்பியான விதூரதா என்பவனையும் அழித்தது (10:78)
குசேலோபாக்கியானம் : ஸ்ரீகிருஷ்ணனின் பால்ய தோழனான சுதாமா த்வாரகாவிற்கு வந்தது (10:80), சுதாமாவிற்கு பல பரிசுகள் அளித்தது (10:81)
திரௌபதி த்வாரகா வந்து ஸ்ரீகிருஷ்ணனின் பல பத்தினிகளை சந்தித்து பேசியது, ஒவ்வொரு மனைவியும் தாங்கள் எப்படி பகவானை மணம் புரிந்தது என விளக்கியது (10:83)
வஸுதேவர் - தேவகிக்கு பிறந்து கமஸனால் கொல்லப்பட்ட ஏழு குழந்தைகளை கண்ணன் உயிர்ப்பித்து, தேவகியிடம் அளித்தது. இந்த குழந்தைகள் மஹாபலி சக்கரவர்த்தியிடம் “சுதலா” என்னும் பாதாள லோகத்தில் இருந்தார்கள் (10:85)
சுபத்ரா கல்யாணம் : பலதேவரின் தங்கையான சுபத்ராவை அர்ஜுனன் கவர்ந்து வந்து திருமணம் செய்து கொண்டது (10:86)
ஸ்ரீமன் நாராயணனின் நாமாக்களை சொல்லும் வேதங்கள் பற்றியது (10:87) இது ஸ்ருதி கீதை என புகழ்பெற்றது. இந்த அத்தியாயத்தை (10:87) ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் நிறைய நாட்கள் சொன்னார்; மிக பொறுமையாக விளக்கினார்.
ஸ்ரீகிருஷ்ணனின் வம்ஸத்தை மீண்டும் ஒருமுறை சொல்லி விட்டு (10:90), ஸ்ரீமத் பாகவதத்தின் மிக முக்கியமான ஸ்கந்தமான் 10 வது ஸ்கந்தம் நிறைவு பெறுகிறது.
10 வது ஸ்கந்தம் எட்டு மாஸங்களுக்கு பிறகு இன்று 17-11-2011 நிறைவு பெற்றது; 11 வது ஸ்கந்தம் துவங்கியது. [இன்று 525வது நாள்]
ராஜப்பா
17-11-2011
10:30 காலை
பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6-30க்கு ஸ்ரீமத் பாகவதம் ஒளிபரப்பாகிறது. 2009 நவம்பர் 9-ஆம் தேதியன்று துவங்கியது. இன்று 525 வது பகுதி ஒளிபரப்பாகியது.

Comments