ஸ்ரீஜயமங்கள விஸ்வரூப பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோயில் புதுச்சேரிக்கு அருகில் (9 கிமீ தூரத்தில்) உள்ளது. இந்தக் கோயிலைப் பற்றி சென்ற 5 நாட்களாக வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் தினமும் சொல்லி வருகிறார். கோயிலையும் காண்பித்து வருகிறார். மிகவும் வசீகரிக்கப்பட்டு, கோயிலைப் பற்றி மேலும் பல விவரங்கள் அறிந்து கொண்டேன். 1999-ல் கோயில் கட்டுவதற்கான எண்ணம் எழுந்தது. 36 அடி உயரமுள்ள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் சிலை வடிக்க பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி தெரிந்தெடுக்கப்பட்டார். இவர் சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயரின் சிலையை வடித்தவர். இவர் ”40 அடி நீளமுள்ள ஒரே கருங்கல் கிடைக்க வேண்டும்” என்றார். ஹனுமானின் அருளால் கல்லும் கிடைத்தது - அதுவும் புதுச்சேரியின் அருகில் சிறுதாமூர் என்ற இடத்தில். 150 டன் எடையுள்ள கல் சென்னைக்கு அருகிலுள்ள கேளம்பாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தன்னுடைய ‘ஸ்வர்ணம் சிற்ப கலைக்கூடத்’தில் ஸ்தபதி ஜுன் 1999-ல் சிலையை வடிக்க தொடங்கினார். சிற்பம் மிக அழகாக வடிக்கப்பட்டு, புதுச்சேரிக்கு 04 ஜூன் 2003 அன்று எடுத்துச் செல்லப்பட்டது. 150 கிமீ தூரம் வழி முழுதும் ஆயிரக்கணக்க