ஸ்ரீஜயமங்கள விஸ்வரூப பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோயில் புதுச்சேரிக்கு அருகில் (9 கிமீ தூரத்தில்) உள்ளது. இந்தக் கோயிலைப் பற்றி சென்ற 5 நாட்களாக வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் தினமும் சொல்லி வருகிறார். கோயிலையும் காண்பித்து வருகிறார். மிகவும் வசீகரிக்கப்பட்டு, கோயிலைப் பற்றி மேலும் பல விவரங்கள் அறிந்து கொண்டேன்.
1999-ல் கோயில் கட்டுவதற்கான எண்ணம் எழுந்தது. 36 அடி உயரமுள்ள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் சிலை வடிக்க பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி தெரிந்தெடுக்கப்பட்டார். இவர் சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயரின் சிலையை வடித்தவர். இவர் ”40 அடி நீளமுள்ள ஒரே கருங்கல் கிடைக்க வேண்டும்” என்றார். ஹனுமானின் அருளால் கல்லும் கிடைத்தது - அதுவும் புதுச்சேரியின் அருகில் சிறுதாமூர் என்ற இடத்தில். 150 டன் எடையுள்ள கல் சென்னைக்கு அருகிலுள்ள கேளம்பாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தன்னுடைய ‘ஸ்வர்ணம் சிற்ப கலைக்கூடத்’தில் ஸ்தபதி ஜுன் 1999-ல் சிலையை வடிக்க தொடங்கினார்.
சிற்பம் மிக அழகாக வடிக்கப்பட்டு, புதுச்சேரிக்கு 04 ஜூன் 2003 அன்று எடுத்துச் செல்லப்பட்டது. 150 கிமீ தூரம் வழி முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமி ராம நாமத்தை பஜித்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். மந்திரம் ஜபிக்கப் பட்ட யந்திரம் 11 ஜூன் 2003-ல் பீடத்தின் கீழ் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளால் நிறுவப்பட்டு, மேலே ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையும் ஸ்தாபிக்கப் பட்டது. 10000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குழுமி ராம நாமத்தை நாள் முழுதும் ஜெபித்துக் கொண்டே இருந்தனர். மறுநாள் விடியல் அருணோதயம் முதல் ஆஞ்சநேயர் தரிஸனம் கொடுக்க ஆரம்பித்தார்.
36 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை இங்கு மட்டும் தான் உள்ளது; உலகில் வேறு எங்கும் கிடையாது. இவ்வளவு பெரிய சிலையை வைப்பதற்கு வேண்டிய பெரிய்ய கோயில் கட்டும் பணி தொடங்கி, 31 ஜனவரி 2007-ல் மஹா கும்பாபிஷேகம் ஆயிற்று. மிக அழகான கோயில். இந்த இடத்திற்கு பஞ்சவடீ என்னும் அழகிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் - (1) வானர முகம் (2) நரஸிம்ஹ முகம் (3) கருடன் (4) ஹயக்ரீவர் (5) ----. ஸ்ரீராமச்சந்திர பிரபுவிற்கு தனி சன்னதி. பட்டாபிஷேக கோலத்தில் ஸீதா, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன், ஹனுமான் ஸகிதம் ஸ்ரீராமர் காக்ஷி அளிக்கிறார்.
ராஜப்பா
22-06-2012
09:15 AM
Comments