Skip to main content

Mylapore

மயிலாப்பூர்.

நேற்று (16/08/2012) மாலை நாங்கள் இருவரும் மயிலாப்பூர் சென்றோம். மயிலாப்பூர் கோயிலுக்குச் சென்று நான்கு மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. முதலில் தெற்கு மாட வீதி வழியாகச் சென்று, சில காய்கறிகள் வாங்கினோம். மிதி பாகற்காய், சுண்டைக்காய், களாக் காய், சில கொட்டை வகைகள் போன்ற அரிதானவற்றை வாங்கினோம்.

பின்னர் கோயில் நோக்கி புறப்பட்டோம். வழியில், ”ஜன்னல் கடையில்” மிளகாய் பஜ்ஜி, உ.கிழங்கு போண்டா ஆகியவற்றை சாப்பிட்டோம். இந்த கடையைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். கூட்டம் இன்னும் குறையவில்லை. பஜ்ஜியும், போண்டாவும் “பறந்து” கொண்டிருந்தன. விலையைத் தான் ஏற்றி விட்டார்கள்.

கோயிலில் வழக்கம்போல பக்தர்கள் கூட்டம். பளபளவென்றிருந்தது. ஸ்ரீகற்பகாம்பாள் உடனாய ஸ்ரீ கபாலீஸ்வரரை நன்கு திருப்தியாக தரிஸித்துக் கொண்டோம். கோயிலில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டன.

அடுத்து, கிரி கடை. யஜுர் உபாகர்மா புஸ்தகம் (சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும்) வாங்கினேன். விரைவிலேயே கிரி கடை தன்னுடைய இன்னொரு கிளையை அண்ணாநகரில், ஐயப்பன் கோயிலுக்கு அருகில், திறக்க இருக்கிறார்கள்.

அம்பிகா கடைக்குச் சென்று அப்பளம் முதலான சில சாமான்களை வாங்கினோம்.

வடக்கு மாட வீதியில் புதிதாக க்ராண்ட் ஸ்வீட்ஸ் கடை திறக்கப்பட்டுள்ளது. தேன்குழல் வாங்கினோம். கடையைப் போலவே அங்குள்ள விலையும் “நன்றாக” உள்ளது !! இமயத்தின் உச்சியில் உள்ளது. வெளியில் 38 - 40 க்குக் கிடைக்கும் தேன்குழல் இங்கு 72.00 !!! ஒரு குறிப்பிட்ட இனிப்பு (பாதாம் கட்லி) இங்கு கிலோ ரூ 890.00 !! வடக்கு மாட வீதி கடந்த 4-5 வருஷங்களில் என்னாமாக மாறிவிட்டது! நகை கடைகளும், பெரிய ஹோட்டல்களும், பூஜை சாமான்கள் கடைகளும், பாங்க் கிளைகளும் - ஏராளமாக திறக்கப்பட்டுள்ளன. ஜேஜே என்றிருக்கிறது.

மயிலாப்பூர் எப்போதுமே மனசுக்கு சாந்தி அளிக்கும் ஓர் இடம்; இன்று கூட நிம்மதியாக இருந்தது. மயிலாப்பூர், மயிலாப்பூர்தான்.

ராஜப்பா
17-08-2012









Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011