பத்மா அக்கா நினைவு அஞ்சலி நம் அப்பா-அம்மா (ஸ்ரீ GR சுப்ரமணிய அய்யர் - ஸ்ரீமதி சம்பூரணம்) அவர்களின் குமாரத்தியாக சௌ பத்மாவதி 04-04-1936 சனிக்கிழமை (ஞாயிறு விடியற்காலம் 02-15 மணிக்கு), யுவ வருஷம் பங்குனி 23-ஆம் தேதியன்று சுக்ல சதுர்த்தசி திதியும், உத்திரம்(1) நக்ஷத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் சேலத்தில் பிறந்தாள். சேலத்தில் பல வருஷங்கள் வசித்த பிறகு, நம் அப்பா-அம்மா 1948-வாக்கில் கடலூர் வந்தனர். அங்கு புதுப்பாளையம் St Anne's Girls High School-ல் பத்மா அக்கா படித்தாள். வந்த புதிதில் புதுப்பாளையம் போன்ற இடங்களில் வசித்து வந்த நம் குடும்பம், 1954ம் வருஷம் அப்பா சொந்த வீடு வாங்கியதும், திருப்பாப்புலியூருக்கு 17 பாபுராவ் தெருவிற்கு நம் சொந்த வீட்டிற்கு அக்டோபர் – நவம்பரில் குடியேறினோம். [1993 வரை இந்த வீட்டில் இருந்தோம்] அவள் SSLC முடித்ததும்,. கொஞ்ச நாட்கள் நம் அம்மாவிற்கு வீட்டு வேலை, சமையல் வேலைகளில் உறுதுணையாக இருந்து வேலைகளை நன்றாக கற்றுக்கொண்டாள். ஈயச் சொம்பில் பத்மா அக்கா பண்ணும் ரஸத்தை டம்ளர் டம்ளராக குடிக்கலாம் – அவ்வளவு ருசியாக இருக்கும். 1955-ம் வருஷம்